பிக்பாஸ்: 90 நாட்களுக்கு பிறகு எவிக்ட் ஆன நிக்ஸன்-ரவீனா! அதிக சம்பளம் பெற்றது யார்?

BB 7 Tamil Evicted Contestants: பிக்பாஸ் சீசன் 7 பாேட்டி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Dec 31, 2023, 08:40 AM IST
  • பிக்பாஸ் 7 போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
  • இந்த வாரம் ரவீனா-நிக்ஸன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • இவர்களில் அதிக சம்பளம் யாருக்கு?
பிக்பாஸ்: 90 நாட்களுக்கு பிறகு எவிக்ட் ஆன நிக்ஸன்-ரவீனா! அதிக சம்பளம் பெற்றது யார்? title=

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பவைகளுள் ஒன்று, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியையும் இதை சுற்றி நிலவும் சர்ச்சையான கருத்துகளையும் பிரிக்கவே முடியாது. அந்த வகையில், அப்போட்டியின் தற்போதைய சீசனும் பல வகையான விவாதங்களை முன்னெடுத்து வைப்பதாக இருந்தது. 

பிக்பாஸ் சீசன் 7:

வெளிநாட்டில் நடைப்பெற்று வந்த ‘பிக் பிரதர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை காெஞ்சம் வேறு மாதிரி மாற்றி, இந்தியில் ‘பிக்பாஸ்’ என்ற ஷோவை 2007ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். இதனை, கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்து. தமிழைப்பொறுத்தவரை கமல்ஹாசன் ஆரம்ப சீசனில் இருந்து தற்போது வரை தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் (Bigg Boss 7 Tamil), கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில், மக்களுக்கு தெரிந்த சில முகங்கள் களமிறங்கினாலும், பலருக்கும் தெரியாத சில டிஜிட்டல் முகங்களும் இதில் போட்டியாளர்களாக நுழைந்தனர். தற்போது இப்போட்டி இறுதிக்கட்டம்நெருங்கி வருவதையொட்டி, முக்கிய போட்டியாளர்கள் என்று கருதப்பட்ட சிலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன்..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்கனவே இந்த இல்லத்தில் 10 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். அதனால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் கணித்தது போலவே, இந்த வாரம் இரண்டு எவிக்ஷன்கள் நடந்துள்ளது. இதில், முதல் ஆளாக வெளியேறிவர் ரவீனா தஹா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறந்த பாேட்டியாளராக விளங்கினார். இந்த நிலையில், 90 நாட்களுக்கு பிறகு, இவர் இப்பாேட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் (Raveena Daha Evicted).

மேலும் படிக்க | கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் இரண்டாவது ஆளாக வெளியேறியவர், நிக்ஸன் என கூறப்படுகிறது. ராப் பாடகரான இவர் போட்டிக்கு வந்த முதல் இரண்டு வாரம் தனியாக விளையாடி வந்தார். பின்பு காதல்-க்ரூப்பிங் என சென்றதால் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்தார். கடந்த சில வாரங்களாக இவர் மக்களுக்கு பிடிக்கும் வகையில் எதுவுமே செய்யவில்லை என்ற கருத்தும் எழுந்தது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த இவருக்கு ரசிகர்கள் குறைவான வாக்குகளை அளித்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் (Nixen Evicted). இவர் எவிக்ட் ஆன எபிசோட் இன்னும் ஒளிபரப்பாகவில்லை என்றாலும், இதற்கான ஷூட்டிங் முடிந்து விட்டதால், இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

யாருக்கு அதிக சம்பளம்? 

பிக்பாஸ் போட்டியை பொறுத்தவரை, இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்கள் இந்த வீட்டில் தங்கியுள்ள ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்த வகையில் ரவீனாவிற்கு (Raveena Daha Salary In Bigg Boss) ஒரு நாளைக்கு ரூ.18ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாம். இவர் மொத்தம் 90 நாட்கள் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்ததால், 16 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

ரவீனாவை போலவே, நிக்ஸனும் 90 நாட்கள் வரை பிக்பாஸ் இல்லத்தில் இருந்துள்ளார். இவர், ரவீனா அளவிற்கு வெளியில் பெரிதாக பிரபலமானவர் இல்லை என்றாலும், பிக்பாஸ் போட்டியில் தனது திறமையால் மக்களை கவர்ந்தார். நிக்ஸனிற்கு (Nixen Salary In Bigg Boss), ஒரு நாளைக்கு ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவருக்கு 11 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | செல்பி எடுத்தியே இது வேணாமா? சரி போ போ.. வைரலாகும் விஜய்யின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News