ரசிகரின் கன்னத்தில் பளார் விட்டார் பாலகிருஷ்ணா

Last Updated : Aug 17, 2017, 03:24 PM IST
 ரசிகரின் கன்னத்தில் பளார் விட்டார் பாலகிருஷ்ணா title=

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நந்தியாலா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அகிலப்பிரியாரெட்டியை ஆதரித்து நேற்றிரவு பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து தனது காருக்கு நடிகரும், எம்.எல்.ஏ-வான பாலகிருஷ்ணாவிற்கு கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் மாலை அணிவித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாலகிருஷ்ணாவின் மீது மாலை ஒன்று விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் பாலகிருஷ்ணா பொது இடம் என்று கூட பார்க்காமல் அருகே நின்ற ரசிகரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

இவர் தெலுங்கு தேசம் கட்சியில் எம்.எல்.ஏ-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

வீடியோ பார்க்க:-

 

Trending News