ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்? ‘அயலான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது..!

Ayalaan Release Date: சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ’அயலான்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 23, 2023, 04:56 PM IST
  • சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான்.
  • இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்? ‘அயலான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது..!  title=

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், அயலான். ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

பொங்கல் ரிலீஸ்!

சையின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள அயலான் திரைப்படம், அடுத்த வருடம் (2024) பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், 4 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்..?

அயலான் படத்தின் வேலைகள், கிட்டத்தட்ட 2 வருட்ங்களாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகள் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் பட வேலைகள் இழுத்துக்கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த வருடம் பொங்கலுக்கு பட ரிலீஸை தள்ளி வைத்திருப்பதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ்

ரிலீஸை தள்ளி வைத்ததற்கு காரணம் என்ன..?

தமிழ் திரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்களான கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் உள்ளிட்ட படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகின்றன. அயலான் திரைப்படமும் இவர்களுடன் சேர்ந்து போட்டிக்கு நின்றது. ஆனால், இவை அனைத்துமே கேங்க்ஸ்டர் ட்ராமா. அயலான் படம் மட்டுமே சயின்ஸ் ஃபிக்‌ஷன். இதனால் சுதாரித்துக்கொண்ட அயலான் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியன் 2-உடன் போட்டி..?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின்  பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது. இந்த நிலையில், அயலான் திரைப்படம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு போட்டியாக நிற்குமோ என்று ரசிகர்கள் கருதுகின்றனர். 

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜூலை மாதம் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. முதன் முறையாக ஃபேண்டசி பிக்‌ஷன் கதையில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் இதே போன்ற கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அடுத்து, இவரின் அயலான் படத்தின் அப்டேட் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்களுக்கு இப்படம் மீது அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது. அடுத்து,சிவா அவரது 21 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை  ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்திற்கான பூஜை விழா சமீபதில் நடைப்பெற்றது. 

பாலிவுட்டில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்..!

மாவீரன் படம் ரிலீஸாவதற்கு முன்னர் அதற்காக ஐதராபாத்தில் நடைப்பெற்ற ப்ரமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நடிகர் ஒருவர், சிவகார்த்திகேயன் விரைவில் பாலிவுட்டிற்குள் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலள் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News