அட்லீயின் ஜவான் செய்த சாதனை! இதுவரை எந்த ஒரு படமும் செய்ததில்லை!

ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ- முந்தைய சாதனைகள் அனைத்தையும் தகர்த்து விட்டது! 24 மணி நேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 12, 2023, 11:02 AM IST
  • ஜவான் ட்ரைலருக்கு பெரும் வரவேற்பு.
  • அட்லீ இந்த படத்தை இயக்கி உள்ளார்.
  • நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
அட்லீயின் ஜவான் செய்த சாதனை! இதுவரை எந்த ஒரு படமும் செய்ததில்லை! title=

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவான் ட்ரைலர் எளிதாக முறியடித்திருக்கிறது. அனைத்து தளங்களிலும் 112 மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோவாக அபிரிமிதமான சாதனைகளைப் படைத்து, தற்போதுள்ள வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாக ஜவானின் பிரிவியூ முதலிடத்தில் உள்ளது. இது ஷாருக்கானின் பரவலான புகழ்... படத்தை படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் படத்தின் வெளியிட்டை பற்றி அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு... ஆகியவற்றின் சான்றாகும். ஜவானுக்கு கிடைத்த சாதனை பார்வைகள் பெருகிவரும் நிலையில், போட்டிகள் நிறைந்த பொழுதுபோக்கு துறையில் கதை சொல்லல் மற்றும் பலனுள்ள சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் ஆற்றலை குறிக்கிறது.‌

மேலும் படிக்க | Fact Check: இளம் நடிகரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?

இந்த வீடியோ அனைத்து எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்திய டிஜிட்டல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு திரையரங்குகளில் ஜவான் வெளியாவதற்கு முன்பே படம் குவித்துள்ள மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பிரதிபலிக்கிறது.  ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  ஜவான் படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 

ஜவான் படத்தை பார்க்க, தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்காெண்டுள்ளனர். காரணம், அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ளதுதான். 5 வருடங்கள் ஷாருக்கானின் படம் எதுவும் வெளிவராததை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் ‘பதான்’ படம் வெளியானது. இதையடுத்து வெளிவர இருக்கும் படம், ஜவான். ஷாருக்கு இதுவரை எடுக்காத அவதாரத்தை இந்த படத்தில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி 2019ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லீ அதன் பிறகு இந்த படத்தைதான் இயக்கி வருகிறார். அதனால், இப்படத்தின் மீது பலருக்க மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  ஜவான் திரைப்படத்தின் பணிகள், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடைப்பெற்று வருகின்றன. இந்த படம் எப்போதோ ரிலீஸாக இருந்ததாகவும், அட்லீ படத்தை முடிக்க சில நாட்கள் தாமதம் செய்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வருட தொடக்கத்திலேயே ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கடைசியில் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News