விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து AR முருகதாஸ் twitter-ல் பதிவு!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா திரைப்படத்திற்கு இயக்குநர் AR முருகதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 20, 2018, 01:16 PM IST
விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து AR முருகதாஸ் twitter-ல் பதிவு! title=

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா திரைப்படத்திற்கு இயக்குநர் AR முருகதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!

சண்டக்கோழி-2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அயோக்யா. இத்திரைப்படதினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார்.

தெலுங்கில் ஜூனியர் NTR, காஜல் அகர்வால் நடித்து வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேகா இப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், KS ரவிக்குமார் ஆகியோர் விஷாலுடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை நடிகர் விஷால் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்த இயக்குநர் AR முருகதாஸ், விஷாலின் அயோக்கயா திரைப்படதிற்கு தனது வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கத்தி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் அவர்களின் இந்த முதல் படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News