அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Anushka Shetty Wedding: பிரபல தென்னிந்திய நடிகை அனுஷ்கா, விரைவில் ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 13, 2023, 05:05 PM IST
  • தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.
  • அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்.
  • மாப்பிள்ளை யார் தெரியுமா?
அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?  title=

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளவர், அனுஷ்கா. இவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அனுஷ்கா:

2006 ஆம் ஆண்டு வெளியான ‘ரெண்டு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பின்னர் இவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் தமிழ் படத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகவில்லை என்றாலும், அவர்களின் மனங்களில் பதியும் அளவிற்கான நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அனுஷ்கா, தமிழ் திரையுலகின் பக்கமே வரவில்லை. 

இந்திய அளவில், தெலுங்கு சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம், அருந்ததி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான இப்படத்தில் அருந்ததி கதாப்பாத்திரத்தில் நடித்த அனுஷ்காதான் ஹீரோ-ஹீரோயின். ஃபேண்டசி, பேய் கதை என்றாலும் இந்த படத்தையும், அருந்ததி கதாப்பாத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு இன்னும் எந்த படங்களும் வெளியாகவில்லை. அழகு, அறிவு, நேர்த்தி என அனைத்து குணாதிசயங்களும் நிரம்பிய நாயகிகளுள் ஒருவர் அனுஷ்கா. 

42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை..

சினிமா பிரபலங்களையும் அவர்களை பற்றி எழும் கிசுகிசுக்களையும் பிரிக்கவே முடியாது. குறிப்பாக தென்னிந்திய திரை பிரபலங்கள் யார்-யாரை காதலிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், இது போல எந்த வித கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த நடிகை அனுஷ்கா. 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு அனுஷ்காவின் உடலை வைத்தும் உருவத்தை வைத்தும் பலர் பலவிதமாக கேலி செய்தனர். ஒரு சிலர் இந்த காரணத்தினால்தான் அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்று கூட கூறினர். ஆனால், தன்னை பற்றி எழும் எந்த வதந்திக்கும் ரியாக்ஷன் கொடுக்காமல் இருப்பவர், அனுஷ்கா. இவருக்கு தற்போது 42 வயதாகிறது. சினிமாவில் அவர் பெரிதாக சாதித்து நல்ல பெயர் எடுத்த போதும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது மட்டும் அவரது ரசிகர்களுக்கு பெரிய குறையாக தெரிகிறது. 

விரைவில் திருமணம்..? 

அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு சினிமா திரையுலகில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுஷ்காவும் பிரபாஸும் ‘பாகுபலி’ படத்தில் ஒன்றாக நடித்த போதிலிருந்து காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டு பாகங்களிலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். அதற்கு முன்னரே, 2009ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கிலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பிடித்திருந்ததாலோ சிலர் இருவரும் காதலித்ததாக பரப்பி விட்டனர். ஆனால் இந்த தகவலை இருவரும் மறுக்கவோ ஏற்கவோ இல்லை. 

Prabhas

இத்தனை நாட்களாக அனுஷ்காவும் பிரபாஸும் அவரவர் வீட்டாரும் தங்களது காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பதற்காக காத்திருந்ததாகவும் தற்போது எல்லாம் கைகூடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இருவரிடம் இருந்தும் நல்ல செய்தியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இவங்கதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News