6-வது முறையாக விஜயுடன் ஜோடி சேரும் காயத்ரி!

Last Updated : Aug 31, 2017, 04:26 PM IST
6-வது முறையாக விஜயுடன் ஜோடி சேரும் காயத்ரி! title=

முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை காயத்ரி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘ரம்மி’ படத்தில் இருவரும் நடித்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது ‘புரியாத புதிர்’, படத்தில் ஜோடியாக நடித்து உள்ளார். இந்தஅடம் நாளை வெளிவர உள்ளது.

இந்நிலையில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார் காயத்ரி. இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீஸாகவில்லை. 

இந்த வகையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதி கதைகள்’ படத்திலும் தற்போது நடிகை காயத்ரி இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சமந்தா, ஃபகத் ஃபாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலமாக நடிகை காயத்ரி 6-வது முறையாக விஜய் சேதுபதியுடன் மோடி சேருகிறார்.

Trending News