சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் தொகை!

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் சில பிராண்டட் பொருட்களுக்கு ப்ரோமோஷன் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2022, 02:44 PM IST
  • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை சமந்தா.
  • அதிக சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்டிலும் முன்னணி வகிக்கிறார்.
  • புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் தொகை! title=

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தாவை பற்றி அறிமுகப்படுத்த தேவையில்லை, ஏனெனில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.  நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்து வந்த இவர் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது மூலம் இவர் கூடுதலாக பிரபலமானார்.  தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா மற்றும் தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் அவர்களின் விருப்பங்கள் பலவற்றை அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும் நிலை ஏற்படும், ஆனால் சமந்தாவிற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் நடித்தார், நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட மணமுறிவிற்கு பின்னர் இவரை பற்றி நிறைய வதந்திகள் வெளியாகியபோதும் கூட சமந்தா துவண்டு போய் விடாமல் அவரது வேளைகளில் தீவிர கவனம் செலுத்தி அனைத்திலும் வெற்றி கண்டு வருகிறார்.  பொதுவாகவே உடை தேர்வுகளில் தனித்துவம் காட்டும் சமந்தாவிற்கு தற்போது ஏராளமான கமர்ஷியல் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  பல முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் சமந்தாவை அணுகி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குறிப்பிட்ட பிராண்டின் தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்து தர கோரிக்கை வைக்கின்றனர்.  இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாம் பார்க்கையில் சாதாரணமாக அவர் பதிவிடும் போஸ்டுகளை விட அதிகளவில் இடையிடையே சில பொருட்களின் விளம்பர போஸ்டுகள் தான் காணப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் இதுபோன்று சில தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்ய ஒரு போஸ்டுக்கு நடிகை சமந்தா கிட்டதட்ட 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த தொகை வெறும் ஒரு போஸ்ட் போடுவதற்கு மட்டும் தானாம், இதுவே சில பிராண்டுகளுக்கு என்று பிரத்யேகமாக போட்டோஷூட் செய்தாலோ அல்லது வீடியோ ஷூட் செய்தாலோ தொகை இரட்டிப்பாகுமாம்.  அந்த நிறுவனங்கள் இவரது கால்ஷீட்டை பெற காத்திருந்து அவர்களது தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்ய கோருகிறது.  மேலும் இவர் செய்யும் விளம்பரத்தை அந்த குறிப்பிட்ட நிறுவனம் எவ்வளவு காலங்கள் பயன்படுத்தும் என்பதை பொருத்து அந்த பிராண்டுகள் 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News