நடிகர் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் மாநகரில் மட்டுமே ஏரளமான சொத்துகள் உள்ளன. அவருக்கு டெல்லியிலும் சொந்தமாக ஒரு வீடு இருந்தது. குல்மோஹர் பார்க் ஹவுசிங் சொசைட்டி பகுதியில் இருந்த வீட்டில் அமிதாப்பின் மறைந்த பெற்றோர்களான ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அந்த வீட்டை 23 கோடி ரூபாய்க்கு அமிதாப்பச்சன் விற்பனை செய்துள்ளார்.
ALSO READ | இணையத்தில் வைரலாகும் அமிதாப் பச்சனின் புதிய புகைப்படம்!
அந்த வீட்டை, அமிதாப்புக்கு நெருக்கமான நெசோன் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னி பேடர் வாங்கியுள்ளார். அவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அமிதாப் குடும்பத்துடன் பழகி வருகிறார். ஜாப்கி என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 418.05 சதுர மீட்டர் உள்ள வீட்டின் பத்திரப்பதிவு டிசம்பர் 7, 2021 அன்று நடைபெற்றுள்ளது.
இது குறித்து பேசிய அவ்னி, அமிதாப் குடும்பத்துடன் நீண்ட நாட்களாக பழகி வருகிறோம். இந்த வீட்டை வாங்கியதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடு ஒன்றை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அமிதாப் வீடு விற்பனை செய்யப்படும் தகவலை அறிந்ததாக தெரிவித்த அவர், உடனே அந்த வீட்டை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து பேசிய டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் பிரதீப் பிரஜாபதி பேசும்போது, அமிதாப்பின் வீட்டில் பல ஆண்டுகளாக யாரும் வசிக்கவில்லை. சந்தை மதிப்புக்கு ஏற்ப வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார். அமிதாப்பச்சன் மும்பையில் இருக்கும் ஜூஹூ பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மாடி கொண்ட அந்த வீட்டின் மொத்த அளவு 10 ஆயிரத்து 125 சதுர அடி. அதே பகுதியில் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது.
ALSO READ | ’நன்றி..நன்றி..நன்றி’ நடிகர் சிவகார்த்திகேயனின் கடிதம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR