Allu Arjun Press Conference | புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தாய் உயிரிழந்த விவகாரம் குறித்து அல்லு அர்ஜூன் (Allu Arjun) இன்று விளக்கம் அளித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புஷ்பா 2 திரைப்பட ப்ரீமியர் ஷோவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தாய் மகன் உயிரிழந்தது துருதிஷ்டவசமானது, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். தாய், மகன் உயிரிழந்த விவகாரம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அவர்களது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அல்லு அர்ஜூன் தெரிவித்தார். யாரையும் குறையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை எனவும் அல்லு அர்ஜூன் தெரிவித்தார். அதேநேரத்தில் தன் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும், அதில் எந்தவிதமான உண்மையும் துளிகூட இல்லை என அல்லு அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் பேசும்போது, " புஷ்பா 2 (Pushpa 2) திரைப்படம் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சம்பவம் மிகவும் துருதிஷ்டவசமானது. உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். இந்த சம்பவம் என்னை மிக கடுமையாக பாதித்துவிட்டது. உண்மையில் பெண் இறந்தது குறித்த சம்பவம் எனக்கு அடுத்த நாள்தான் தெரிந்தது. கேள்விப்பட்டதும் நான் மிகவும் வேதனையடைந்தேன். உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க என்னுடைய தந்தையிடம் பேசினேன். எனக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தையின் ஒத்த வயதில் தான் குழந்தை இருக்கிறது. எனக்கும் அந்த வேதனை புரியும். புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவின்போது ஏற்பட்ட சம்பவம் உண்மையிலேயே எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை." என கூறினார்.
மேலும் படிக்க | Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?
தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜூன், " நான் முழுமையாக சட்டத்தை மதிப்பவன். ஆனால் ப்ரீமியர் ஷோவுக்கு செல்லும்போது காவல்துறை எனக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதை காவல்துறை ஒழங்குபடுத்திய பிறகே நான் தியேட்டருக்குள் சென்றேன். அப்போதும் என்னுடைய மேனேஜர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறியவுடன் தியேட்டரை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் நான் எந்த ரோடு ஷோவும் நடத்தவில்லை. தியேட்டருக்கு முன்பாக கூடியிருந்த ரசிகர்களுக்கு கைகளை மட்டுமே காண்பித்து என்னுடைய அன்பை தெரிவித்தேன்.
ஆனால் கடந்த 15 நாட்களாக என்மீது தவறான மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பொய்யானவை. யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை, வருத்தமும் இல்லை. உண்மையில் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் எல்லோரும் எனக்கு உதவியாக இருந்தனர். எல்லா விதத்திலும் எனக்கு சப்போர்ட் செய்தனர். அதேநேரத்தில் நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் குற்றச்சாட்டுகளாக என் மீது சொல்கின்றனர். உண்மையில் இந்த சம்பவத்தை பற்றி நான் எதுவும் இதுவரை பேசவில்லை. யாரும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை என் மீது வைக்க வேண்டாம். அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் நான் அங்கு சென்றிருக்கவே மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. என்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன். நான் தைரியமானவன், எதற்கும் அச்சப்படவில்லை.
ஆனால், என் குணாதிசயம் மீது தேவையில்லாமல் எழுப்பப்படும் கேள்விகள், அவதூறுகளை ஏற்க முடியாது. குழந்தையின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன். அவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்கும் உதவிகளை செய்யவும் தயாராக இருக்கிறேன். என் கவனத்துக்கு வராத அல்லது நான் சொல்லாத விஷயங்களுக்கு எப்படி பொறுபேற்க முடியும்." என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | புஷ்பா 2 படம் ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ