50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?

சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் பலர். அதில் திரையுலகம், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் அதிகம். அதிலும் 50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் பிரபலங்கள் என்றால் உண்மையிலேயே அவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரபலங்கள் விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2020, 07:52 PM IST
50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் கவர்ச்சி நடிகை யார் தெரியுமா? title=

சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் பலர். அதில் திரையுலகம், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் அதிகம். அதிலும் 50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் பிரபலங்கள் என்றால் உண்மையிலேயே அவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரபலங்கள் விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.
நடிகை ஆலியா பட்டுக்கு (Alia Bhat) tஎத்தனை ரசிகர்கள் என்றால் முதலில் எண்ணிக்கையை சரியாக சொல்ல முடியாது. இப்போது 50 மில்லியனுக்கும் அதிகம் என்று உறுதியாக சொல்லலாம். அவர் சொல்ல வேண்டும் சமூக ஊடக தரவுகள் சொல்லும் நிதர்சன புள்ளிவிவரம் இது.
'Gully Boy'  பிரபலம் ஆலியா பட், புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்ட்ராகிராமிற்கு நன்றி தெரிவிக்கிறார். தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறார். இந்த நாள் என் வாழ்க்கையின் பாராட்டு நாள் என்று சொன்ன ஆலியா, 'appreciation day' என்று பெயரும் கொடுத்துவிட்டார்.   
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆலியா பட், நெஞ்சைத் தொடும் வகையில் நீண்ட குறிப்புடன் இன்ஸ்ட்ராகிராமில் நன்றி தெரிவித்துக் கொண்டார். சமூக ஊடகங்களைப் பற்றியும் பேசிய அவர், அவற்றுக்கும் 'appreciation day'வில் நன்றி சொல்ல மறக்கவில்லை.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Today is appreciation day.. thank you my family.. my people.. you have today given me 50M love.. I love you ALL to the stars and beyond  I'd like to take this moment to share something I’ve learned over the last couple of months.. social media connects us.. it excites us and yes it also entertains us.. but IT IS NOT US. Even when I was at 5, I5 or 50K love I was as happy and as grateful as I am today. I truly truly truly believe that our lives are made up of the relationships we cultivate with people and most importantly OURSELVES...no one has the right to make you feel any lesser or greater by the touch of a button. So as I said, today is appreciation day. I would like you all to take a moment and appreciate yourselves.. appreciate your mind,your body,your heart and your soul!! Because no like or dislike.. no follow or unfollow..no troll or poll can take who YOU are away from yourself Okay bye 

A post shared by Alia Bhatt  (@aliaabhatt) on

"இன்று பாராட்டு நாள் .. என் குடும்பத்திற்கு நன்றி .. என் மக்கள் நீங்கள்.. நீங்கள் இன்று எனக்கு 50 எம் அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள்..நட்சத்திரம் என்பதைத் தாண்டி உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இந்த தருணத்தில் நான் ஒன்றை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் கடந்த இரண்டு மாதங்களாக கற்றுக்கொண்டேன், "என்று ஆலியா பட் இன்ஸ்ட்ராகிராமில் எழுதினார்.

27 வயதான நடிகை ஆலியா பட், "இன்ஸ்டாஃபாம்" (Instafam) உடன் "கடந்த இரண்டு மாதங்களில்" கற்றுக்கொண்டவற்றை தெரிவித்தார். "சமூக ஊடகங்கள் நம்மை இணைக்கின்றன .. அவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன, நம்மை மகிழ்விக்கின்றன .. எனக்கு 5, I5 ரசிகர்கள் இருந்தபோது எந்த அளவு மகிழ்ச்சியடைந்தேனோ, அதே மகிழ்ச்சியை 50K ரசிகர்கள் இருக்கும்போதும் அனுபவிக்கிறேன். அன்றும் நன்றியுடன் இருந்தேன். நான் உண்மையிலேயே, சத்தியமாக அனைவருடனும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒருவர் ஒரு பட்டனை அழுத்தி, நம்முடைய மகிழ்ச்சியை கூட்டவோ குறைக்கவோ செய்யும் உரிமையை யாரும் பெற முடியாது. வாழ்க்கை என்பது, நாம் மக்களுடன் வளர்க்கும் உறவுகளாலும், மிக முக்கியமாக நம்முடையது என்பதாலும் ஆனது என்று உண்மையிலேயே நம்புங்கள்" என்று அவர் எழுதினார்.

நமது மனதை, உடலை, இதயத்தை, ஆத்மாவைப் பாராட்ட 'ஒரு கணம்' ஒதுக்குமாறு பிரபல நட்சத்திரம் ஆலியா பட் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

"நான் சொன்னது போல், இன்று பாராட்டு நாள் (appreciation day). நீங்கள் அனைவரும் ஒரு கணம் உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். உங்கள் மனதையும், உங்கள் உடலையும், உங்கள் இதயத்தையும், உங்கள் ஆத்மாவையும் பாராட்டுங்கள் !! ஏனென்றால் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பின்தொடர்ந்தாலும் அல்லது பின்தொடராமல் இருந்தாலும்,நீங்கள் யார் என்பதை எந்த வாக்கெடுப்பும் சரியாக சொல்லிவிட முடியாது" என்று ஆலியா ரசிகர்களுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். எழுதினார்.

ஆலியாவின் இந்த பாணியையும் பாராட்டும் டஜன் கணக்கான ரசிகர், தங்களது கனவுக்கன்னி சொன்னதுபோல, தங்களை பாராட்டிக் கொள்ளும் appreciation dayவை கொண்டாடுகின்றனர்.

இதையும் படியுங்கள் | வெளியானது ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News