வாரிசை வசூலில் வீழ்த்திய துணிவு! தமிழகத்தில் பாக்ஸ் ஆபீஸ் கிங்!

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் 'துணிவு' படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரித்து இருக்கிறார். 

Written by - RK Spark | Last Updated : Jan 13, 2023, 03:10 PM IST
  • துணிவு, வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி வெளியானது.
  • வினோத் இயக்கத்தில் 3வது முறையாக அஜித் நடிக்கிறார்.
  • போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
வாரிசை வசூலில் வீழ்த்திய துணிவு! தமிழகத்தில் பாக்ஸ் ஆபீஸ் கிங்! title=

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அஜித்தின் 'துணிவு' படம் ஜனவரி 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ இல்லையோ, வாரிசு படத்தின் வசூலை மிஞ்சி அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்திருக்கிறது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது அஜித் ரசிகர்களோ தங்கள் நடிகரின் படம் வெளியானதை விட வாரிசு படத்தின் வசூலை மிஞ்சிவிட்டதை நினைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | வாரிசா? துணிவா? பொங்கல் வெற்றியாளர் யார்?

அஜித்தின் துணிவு படம் நள்ளிரவில் வெளியாகி திரையரங்குகளை விழாக்கோலமாக காட்சியளிக்க செய்தது, ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டும், அஜித்தின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும், மலர் மாலைகள் அணிவித்தும் அந்த இடத்தையே திருவிழாவாக மாற்றினர். அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.23 கோடி என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வாரிசு படம் துணிவு படத்தை விட குறைவான அளவே வசூலை பெற்று இருக்கிறது. இதனால் அஜித்தை ரசிகர்கள் இது எங்களுக்கான பொங்கல் பண்டிகை, துணிவு பொங்கல் தான் ஜெயித்துவிட்டது என்று கூறி கோஷமிட்டு வருகின்றனர். இதன்மூலம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் வெற்றிப்படம் அஜித்தின் துணிவு என்பது உறுதியாகி இருக்கிறது.

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் 'துணிவு' படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பில் 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், ஜி.பி.முத்து, அமீர், பாவ்னி, சிபி சந்திரன், பகவதி பெருமாள், மமதி சாரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News