அட, இதுதான் விடாமுயற்சி படத்தின் கதையா? ரொம்ப சிம்பிளா இருக்கே..

Vidaamuyarchi Movie Story : அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த விவரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2024, 03:11 PM IST
  • விடாமுயற்சி திரைப்படத்தின் கதை
  • ஹாலிவுட் படத்தின் தழுவல்..
  • ரொம்ப சிம்பிளா இருக்கே..
அட, இதுதான் விடாமுயற்சி படத்தின் கதையா? ரொம்ப சிம்பிளா இருக்கே.. title=

Vidaamuyarchi Movie Story : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டில் இரண்டு படங்கள் உருவாகி இருக்கிறது. இவை இரண்டுமே 2025ல் வெளியாக உள்ளது. அதில் ஒன்று விடாமுயற்சி.

விடாமுயற்சி திரைப்படம்:

அஜித் குமார், துணிவு படத்திற்கு பிறகு கமிட் ஆன படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி, சில மாதங்கள் கழித்துதான் படப்பிடிப்பே ஆரம்பித்தது. அதற்கிடையே அஜித் பைக் டூர், படப்பிடிப்பில் விபத்து போன்ற சம்பவங்கள் நடந்ததால், ஷூட்டிங் இன்னும் கொஞ்சம் தாமதமானது. இருப்பினும், படக்குழுவின் ‘விடாமுயற்சியால்’ விடாமுயற்சி படத்தின் பணிகள் இறுதியில் நிறைவடைந்தது.

வரும் ஜனவரி மாதம், .பொங்கல் ரிலீஸாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதை அடுத்து இதன் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் பிண்ணனி இசை சேர்ப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக பதிவிட்டிருந்தார்.

கதை இதுதானா? 

விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியாகி இருப்பதை அடுத்து, அப்படத்தின் கதை விவரம் குறித்த தகவலும் இணையத்தில் கசிந்திருக்கிறது. சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்வதன் படி, விடாமுயற்சி படம் ஆங்கிலத்தில் 1997ஆம் ஆண்டில் வெளியான பிரேக் டவுன் படத்தின் கதை என கூறப்படுகிறது.

அப்படத்தின் கதைப்படி, கணவனும் மனைவியும் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வார்கள். இந்த பயணத்தில், மனைவி மாயமாகி விடுவார். இவரைத்தேடி அலையும் கணவன், முகம் தெரியாத எதிரிதான் அதற்கெல்லாம் காரணம் என்பதை கண்டுபிடிப்பான். அதிலிருந்து அவன் எப்படி தப்பினான்? மனைவியை கண்டுபிடித்தானா இல்லையா? என்பதுதான் மீதி கதை. இதுதான் விடாமுயற்சி படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் படம் வெளியான பின்புதான், இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவரும். இப்போது வரை இந்த படத்தின் கதையை கேட்டவர்கள், ரொம்ப சிம்பிளா இருகே என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Sawadeeka என்றால் என்ன? விடாமுயற்சி முதல் பாடல் டைட்டிலின் அர்த்தம்!

முதல் சிங்கிளிற்கு வரவேற்பு:

வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு விடாமுயற்சி படம் மூலம் அஜித்துடன் கைக்கோர்த்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. “Sawadeeka” என்ற பெயர் கொண்ட அந்த பாடலில் அனிருத்தும் நடனமாடுகிறார். வழக்கமாக அனிருத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவது போல இந்த பாடலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அஜித்தை அவரது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் இதில் கருப்பு முடியுடன் காண்பிக்க முயற்சி செய்திருக்கின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் புதுமையை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலுடன் படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த பாடல், த்ரிஷாவிற்கும் அஜித்திற்கும் படத்தில் திருமணம் முடிந்த பிறகு வரும் பார்டி சாங்காக இது இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மேலும் படத்தின் டீசர் வெளியான போதும் கூட, இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பதை ரசிகர்களால் யூகிக்க முடிந்தது.

அஜித்தின் அடுத்த படம்..

அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் சைன் செய்தார். விடாமுயற்சி படம் போல இழுத்தடிக்காமல், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவிலேயே நடந்து முடிந்தது. இதில் அஜித் மூன்று லுக்கில் தோன்றுகிறார். இதில் இவருடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதிலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷாதான் நடிக்கிறார். 

மேலும் படிக்க | விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!\

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News