Rohini Theatre Fireworks Viral Video: நமது இந்திய சமூகத்தில் இருந்து அரசியலை தவிர்த்து பிரிக்கவே முடியாத இரண்டு விஷயங்கள் என்றால் ஒன்று கிரிக்கெட், மற்றொன்று சினிமா. கிரிக்கெட் வீரர்கள் விளம்பரத்தில் நடித்தால் அந்த பொருள் சந்தையில் அனைவரிடமும் சென்று சேரும் என்பது இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரின் வளர்ச்சிக்கு பின்னான மார்க்கெட்டிங் யுக்தியாக மாறிவிட்டது.
சினிமாவும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை யாராலும் மறுக்கவே முடியாது. ஆட்சியே மாற்றக்கூடிய சூழ்நிலையை ஒரு படமோ அல்லது ஒரு நடிகரோ உருவாக்கலாம். தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கத்தை நான் இங்கு சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை. கிரிக்கெட், சினிமா ஆகியவை எளிமை மக்களின் கொண்டாட்டமாக இருப்பதே சிறப்பான ஒன்றாகும், அதனாலேயே இத்தகைய தாக்கம் நிகழ்கிறது.
அஜித் பிறந்தநாள் கொண்டாடும்
அந்த வகையில் ஒரு நடிகரின் பிறந்தநாள் என்பது அவரின் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை தினம் போல்தான். நாம் தீபாவளியை எதிர்பார்த்து காத்திருப்பது போல், நடிகரின் பிறந்தநாளுக்கு எதிர்பார்த்து காத்திருந்து காலை முதல் இரவு வரை கொண்டாட்டத்திலேயே அந்த நாளை செலவழிப்பார்கள். ரத்த தானம், மதியம் அன்னதானம் என ரசிகர் மன்றங்களும் பல நலத்திட்டங்களை செய்வதை நாம் பார்த்திருப்போம்.
மேலும் படிக்க | ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்
இந்நிலையில், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினமான இன்று நடிகர் அஜித் குமார் 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்கள், திரையுலகினர், பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித் இதுபோன்ற பெரும் கொண்டாட்டங்களை எப்போதுமே ஊக்கவித்ததில்லை என்றாலும் அவரை கொண்டாடுவதை ரசிகர்கள் என்ற கைவிடமாட்டார்கள் எனலாம். நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
தீனா திரையிடல்
இருப்பினும், அஜித்தின் பிறந்தநாளான இன்று அவரின் ரசிகர்கள் திரையரங்குகளில் அவர் நடித்த படங்களை பார்க்க அதிகம் விரும்புவார்கள். புதிய திரைப்படம் ரிலீஸாக நீண்ட நாளாகும் என்ற நிலையில், இன்று மாநிலம் முழுவதும் பல திரையரங்குகளில் அஜித் நடித்த திரைப்படங்களான தீனா, பில்லா 1 ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காலை 9 மணிக்கே முதல் ஷோ போட்டதால் ரசிகர்கள் காலை முதலே தங்களின் அலப்பறைகளை தொடங்கிவிட்டனர் எனலாம்.
அத்துமீறும் ரசிகர்கள்
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை தீனா திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை காண காலை முதலே கோயம்பேடு பகுதியில் கடும் கூட்டம் நிலவியது. திரையரங்கில் ரசிகர்கள் தீனா திரைப்படத்தை ரசித்து பார்த்து கொண்டாடி வந்த சூழலில், ஒரு ரசிகர் பட்டாசை பற்றவைத்து திரையரங்கத்தின் உள்ளேயே வெடித்து அத்துமீறி உள்ளனர்.
#Ajithkumar #Thala #DheenaReRelease #Rohinitheatre #HBDAjithKumar pic.twitter.com/TJmk19C1JQ
—(@Rko_Yuvi) May 1, 2024
அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்று ரசிகர்கள் தங்களின் கொண்டாட்டத்தின் போது பொது சொத்தை சேதப்படுத்துவது தொடர் நடைபெறுகிறது. இதுபோன்ற ஒரு பட ரிலீஸின் போதுதான் ரோகிணி திரையரங்கத்தின் நுழைவில் இருந்த கண்ணாடியால் ஆன தடுப்பு முழுவதுமாக உடைந்து விழுந்தது.
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் அன்று ரோகிணி திரையரங்கம் அருகே உள்ள சாலையில் லாரி மேல் ஏறி நின்று ஆடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்தே தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மங்காத்தாவை இலவசமாக பார்க்கலாம்
அஜித் நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மங்காத்தா. இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மே 1ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை SunNXT செயலியில் மங்காத்தா திரைப்படம் 5 நாள்களுக்கு இலவசமாக பார்க்க கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ