பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி (Vijayalakshmi). ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்து இருந்தார். சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக சீமான் மீது பேஸ்புக் லைவ்வில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ALSO READ | BREAKING: பிரபல நடிகை தற்கொலை முயற்சி.....மருத்துவமனையில் அனுமதி...நிலை என்ன
இந்நிலையில் இவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில்.,
இது எனது கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன். நேற்று முன்தினம் ஹரிநாடார் மீடியாவில் என்னை மிகவும் அசிங்கப்படுத்தி பேசினார். இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். என்னை விபாச்சாரி என சோசியல் மீடியாவில் பலரும் அவதூறாக விமர்சித்தனர். எனக்கு இதற்கு மேல வாழ பிடிக்கவில்லை. சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்.
ALSO READ | Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!
நான் இனி உங்களுக்கு ஒரு நினைவாக மட்டுமே இருப்பேன். யாருக்காவது தொல்லை கொடுத்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.