சிம்புவுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் முன்னணி நடிகை

சிம்புவுடன் இதற்குமுன் நடித்த படத்தில் கெமிஸ்ட்ரி சரியாக வொர்க் ஆகவில்லை என கூறியிருக்கும் அந்த நடிகை, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 12, 2022, 12:08 PM IST
  • சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை
  • அந்தப் படத்தில் கெமிஸ்டிரி வொர்க் ஆகவில்லை என வருத்தம்
  • மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்
சிம்புவுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் முன்னணி நடிகை title=

மாநாடு வெற்றிப்பிறகு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, சினிமா துறையில் தான் விட்ட இடத்தை பிடிக்க ஆர்வமாக உள்ளார். அவருக்கு பின் வந்த நடிகர்களின் மார்க்கெட்டுகள் எல்லாம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருந்த சிம்பு, அந்த இடத்தை பிடிக்க இரவு பகலாக உழைத்து வருகிறார். கடந்த காலங்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மாநாடு படத்துக்குப் பிறகு பாசிட்டிவான ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | 100 நாட்களை கடந்த மாநாடு! வெற்றியின் ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்!

இதனால் அவருக்கான பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளன. வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ‘பத்து தல’ படத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு அடுத்து எந்த படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், சிம்புவை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு - நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட ’வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் உருவாக்க அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார். இதைத்தவிர இன்னும் சில படங்களும் சிம்புவின் தேதிக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பியுள்ளார் நடிகை தமன்னா.

இருவரும் அன்பானவன் - அசராதவன் - அடங்காதவன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இருவருக்கும் இடையே கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆகவில்லை. இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் நடிகை தமன்னா, சிம்புவுடன் நடித்த படத்தில் கெமிஸ்டிரி வொர்க் ஆகவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதனால், அவருடன் மீண்டும் ஒரு படம் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | நடிகர் சிம்பு வழக்கு: ஒருலட்சம் அபராதம் விதிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News