மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா?

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா தற்போது மும்பையில் வீடு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2022, 10:49 AM IST
  • சமந்தா - நாக சைதன்யா சமீபத்தில் விவாகரத்து.
  • அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாவது இடம்.
  • விரைவில் மும்பையில் குடியேறுகிறார்.
மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா? title=

சமந்தா - நாக சைதன்யா விவகாரத்திற்கு பின்னர் அதிகளவில் சமந்தாவை பற்றிய செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  சமந்தாவின் சம்பளம், உடை, ஒப்பனை என இவரை பற்றி அடுக்கடுக்காக பல செய்திகள் வெளியானபடியே உள்ளது.  மணமுறிவால் முடங்கி போய் விடாமல் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சமந்தா பயணித்து கொண்டிருக்கிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் ஹிந்தி திரையுலகிலும் ஜொலிக்கும் பொருட்டு மும்பை பகுதியில் குடியேற போவதாக சில செய்திகள் முன்னர் வெளியானது.  

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உள்ள 3 படங்களின் பாதிப்புகள்: யோகி பாபு படத்தின் காப்பியா?

மும்பையில் இரண்டு சொகுசு வீடுகளை சமந்தா தேர்ந்தெடுத்து இருந்ததாகவும், அந்த இரண்டில் ஒரு வீடு பிடித்துவிட்டதாகவும் அதனையே அவர் வாங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  அந்த வீடானது கடற்கரையோரத்தில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் மதிப்புமிக்கதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  மேலும் சமந்தா தற்போது வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கியிருப்பதகவும், அந்த வீட்டை வாங்கியதும் புது வீட்டிற்கு குடியேறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.  இதனைத்தொடர்ந்து சமந்தாவிற்கு ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்து அங்கும் அவர் கால்தடத்தை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலில் நடிகை சமந்தா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் என்று சில செய்திகள் வெளியானது.  புஷ்பா படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கே இவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  திரைப்படங்களின் மூலம் சம்பாதிப்பது மட்டுமல்லாது, இவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் சில பிராண்டு பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலமும் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  திரைப்படங்கள், விளம்பர படங்கள் என நடிகை சமந்தா தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

மேலும் படிக்க | விபத்தில் சிக்கிய ‘உயிரே’ பட நடிகை! மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News