பீஸ்ட் படத்தை 4 முறை பார்த்த பிரபல நடிகை

நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 படத்தை தடவை பார்த்தேன், மற்றவர்கள் அதனை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2022, 08:34 PM IST
  • பீஸ்ட் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
  • சர்கார் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
  • தற்போது தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
பீஸ்ட் படத்தை 4 முறை பார்த்த பிரபல நடிகை title=

சமூகத்தில் நடக்கும் பல அவலங்கள் குறித்தும், அரசியல் குறித்தும் துணிச்சலாக பேசுபவர்களும் நடிகர் கஸ்தூரியும் ஒருவர்.  திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட இவர் சமூகத்தில் பெண்களுக்கெதிரான நடக்கும்  அவலங்கள், தடம்புரண்டுள்ள திரையுலகம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், ஒரு காலத்தில் செய்தித்தாள்களில் எங்காவது ஒரு மூலையில் இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது தலைப்புச் செய்தியாக நாள்தோறும் வந்து கொண்டு இருக்கிறது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கியிருந்தால் விருதுநகர் சம்பவம் அரங்கேறி இருக்காது, விருதுநகர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் வெளியே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | தொடங்கிவிட்டது கேஜிஎஃப் 3 - தயாரிப்பாளர் அறிவிப்பு

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நினைக்கும் போது ஆதங்கப்பட வைக்கிறது. இனியும் தாமதிக்காமல் பெண்கள் பாதுகாப்பிற்கு  சட்டங்களை கடுமையாக திருத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதி கிடைக்காது, சமுதாயமும் மாறாது.  கூட்டு பாலியலில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை வெளியே விடக்கூடாது, இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வயது போன்ற விஷயங்களால் அவர்கள் எளிதில் தண்டனையிலிருந்து தப்பவிடக்கூடாது.  மேலும் தமிழகத்தில் சக்கை போடு போடும் படங்கள் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் தான், தெலுங்கில் நன்றாக ஓடிய படங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஓடுகிறது.  தமிழ் சினிமாவும் உலக கண்டன்டுக்கு இணையான கண்டன்ட் கொடுத்தால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும், கதாநாயகர்கள் மற்றும் விளம்பர உத்திகளை கொண்டு படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரிக்கிறார்கள், ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் பொதுமக்களுக்காகவும் படம் எடுக்கவேண்டும்.  நான் மிகப்பெரிய விஜய் ரசிகன் என்பதால் அந்த படத்தை 4 தடவை பார்ப்பேன், மற்றவர்கள் அதனை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும். 

பிரம்மாண்டம் என்பது பிரம்மாண்டம் தான், கதைக்கும் காசுக்கும் சம்பந்தம் இல்லை, படத்துடைய வெற்றிக்கும், பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை. தமிழில் ஹிட்டடித்த படங்களுக்கு பிற மொழிகளுக்கு ரீமேக் ரைட்ஸ் கொடுத்துவந்த நிலை மாறி, தமிழ் சினிமா பொற்காலம் திரும்பி வரவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.  தமிழ்மணம் மாறாத கதைகளை ராமராஜன் இளையராஜா காம்பினேஷன் அளித்தது, அந்த மாதிரியான படங்கள் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும்.  பான் இந்தியாவிற்கு தமிழ் கலாச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேசியவர், இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிப் பேசியதாக மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது, அம்பேத்கரை மதிக்கும் மோடியை எதிர்க்கும் கொள்கையுடையவர்கள், கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கக்கூடியவர்களால் இளையராஜா தான் நினைத்த நல்ல விஷயத்தை சொன்னது அரசியலாக்கப்பட்டுள்ளது.  ஜாதி, மதம், சமத்துவ முன்னேற்றம் என எல்லாவற்றையும் பேசுவதற்கு ராஜா சாருக்கு தகுதி உள்ளது. அவருடைய வார்த்தையில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் சில்லறைத்தனமாக அரசியலுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News