மதிமாறன் திரைவிமர்சனம்: ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன். இந்த படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன், பாவா செல்லத்துரை என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிடைத்திருந்தது.
இந்த படத்தின் ஹீரோவான வெங்கட் செங்குட்டுவன் உடல் வளர்ச்சி இல்லாமல் மூன்று முதல் நான்கு அடி உயரம் மட்டுமே உள்ளார், இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார், இதனால் அவரது அப்பா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அம்மா இருவரும் தற்கொலை செய்து விடுகிறார். இதன்பிறகு தனது அக்காவை தேடி சென்னைக்கு செல்கிறார் வெங்கட். அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது அதை எப்படி வெங்கட் கண்டுபிடிக்கிறார் என்பதை மதிமாறன் படத்தில் கதை.
மேலும் படிக்க | விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!
குள்ளமாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் வழக்கம் பல இடங்களில் இருந்து வருகிறது, அதை நாம் கண்ணெதிரே பார்த்தும் இருப்போம். அப்படி ஒரு பிரச்சனை உள்ள நபரை வைத்து ஒரு முழு படத்தை எடுத்துள்ள இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியனுக்கு பாராட்டுக்கள். குள்ளமாக இருப்பதால் ஒருவர் என்னென்ன கேலி கிண்டலுக்கு ஆளாகிறார் என்பதை படம் முழுக்க காட்டியுள்ளார். மேலும் அதை வைத்து கதை, திரைக்கதையை சுவாரசியமாக எடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தை தனது தோள்களில் சுமந்து செல்வதும் வெங்கட் தான். நடிப்பு, நடனம் என தனது திறமையை படத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்காலம் உள்ளது.
கதாநாயகியாக நடித்து வரும் இவானா இந்த படத்தில் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் இவானா. மேலும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன், செக்யூரிட்டியாக நடித்துள்ள பாவா செல்லதுரை என அனைவரும் நல்ல பெர்பார்மன்சை வழங்கி உள்ளனர். படம் ஒரு கட்டத்தில் இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கு மாறுகிறது. அங்கிருந்து திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் இருந்தது, பாடல்களை இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. முதல் பாதி அடுத்தடுத்த திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக செல்கிறது, அதே சமயத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் படம் முழுக்க வரும் டயலாக்குகளும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர மதிமாறன் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ