காதலில் விழுந்த நடிகர் விஷால்...யார் அந்த பெண்?

நடிகர் விஷால் தனக்கு பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2022, 11:01 AM IST
  • விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார்.
  • இதனை தொடர்ந்து ஆதிக் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • 2019ம் ஆண்டு விஷாலுக்கு திருமணம் நடைபெற்றது.
காதலில் விழுந்த நடிகர் விஷால்...யார் அந்த பெண்? title=

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் அவரது படங்களில் விறுவிறுப்பான சண்டை காட்சிகளை சிறப்பாக செய்ய ரிஸ்க் எடுப்பதற்கு பெயர் போனவர்.  அனைத்து விதமான சவாலான கதாபாத்திரத்தையும் தைரியமாக ஏற்று நடிப்பார், 'அவன் இவன்' படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் சண்டை காட்சிகளுக்காக ரிஸ்க் எடுப்பது எல்லோருக்கும் தெரிந்தது, இவர் இந்த வருடத்தில் மட்டும் 'லத்தி' படத்தில் சண்டைகாட்சிகளுக்கு எடுத்த ரிஸ்க்கிற்காக கிட்டத்தட்ட மூன்று முறை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் படிக்க | தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இதுதான்!

மேலும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார், நடிகர் சங்க கட்டிடத்தை முழுமையமாக கட்டிமுடித்த பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்கிற முறையில் கூறி வந்தார்.  ஆனால் சில நிதி சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் போன்ற பல சிக்கல்கள் காரணமாக நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  விஷாலும், நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சில கிசுகிசுக்கள் பரவியது.

vishal

அதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு அனிஷா அல்லா ரெட்டி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதித்ததன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது.  சமீபத்திய பேட்டியொன்றில் நடிகர் விஷால் கூறுகையில், தனக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் பெரிய உடன்பாடில்லை என்றும், தான் இன்னொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் அந்த பெண் யார் என்பது குறித்து தெரியப்படுத்துவேன் என்றும் கூறி இருக்கிறார்.  தற்போது விஷால் சுனைனாவுடன் லத்தி படத்தில் நடித்துள்ளார், அதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்கிற படத்திலும், பின்னர் அவரே இயக்கும் 'துப்பறிவாளன்-2' படத்திலும் நடிக்கிறார்.

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News