இன்னும் கொஞ்ச நேரம்..... மிரட்ட காத்திருக்கும் #பிகில் ட்ரைலர்

கவலைப்பட வேண்டாம், இன்று  மாலை 6:00 மணிக்கு #பிகில் படத்தின் மிரட்டல் டிரெய்லர் வெளியாக உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 12, 2019, 05:42 PM IST
இன்னும் கொஞ்ச நேரம்..... மிரட்ட காத்திருக்கும் #பிகில் ட்ரைலர் title=

புதுடெல்லி: இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று "அட்லி" இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "பிகில்" ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக "பிகில்" படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) "பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று, அதனால் சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்று "பிகில்" ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில், #BigilTrailerDay என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இன்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரீமியர் இல்லைதோழர்களே, தயவுசெய்து கவலைப்பட வேண்டாம், இன்று மாலை 6:00 மணிக்கு #பிகில் படத்தின் மிரட்டல் டிரெய்லரை ரசிக்க தயாராகுங்கள். #BigilTrailer என பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக் "பிகில்" திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ளத்தால், இதுவரை டீசர் ஏன் வெளியாகவில்லை? எப்பொழுது வெளியாகும்? படத்தின் அப்டேட் என்ன? போன்ற கேள்விகளுடன் விஜய் ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளம் மூலம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டு வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 7 ஆம் தேதி "பிகில்" படத்தின் ட்ரைலர் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அறிவித்த சில மணி நேரங்களில் #BigilTrailer என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் டிரேண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Trending News