நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் தற்போது நடித்துவருகிறார். வாரிசு எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியானது. ஒன்றுக்கு மூன்றாக வெளியான படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகின.
இப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார், ஷாம் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இதில் நடிக்கிறார். ஏற்கெனவே வெளியான விஜய்யின் பல படங்களில் இவரது பெயர் அடிபட்டது. ஆனால் இந்தப் படத்தில்தான் அது உறுதியானது.
அதேபோல விஜய்க்கு தமன் இசையமைப்பதும் இதுதான் முதன்முறை. படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகக் கூறப்படுவதால் அதற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இதில் ஆப் டிசைனராக நடித்துள்ளாராம் நடிகர் விஜய். வெளிநாட்டில் அப்ளிகேஷன் டிசைன் செய்யும் பணியில் ஈடுபடுவது போல அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
அதேபோல இப்படத்தில் அவர் தனது சொந்தப் பெயரிலேயே நடிக்கவும் உள்ளாராம். அதாவது இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் விஜய் ராஜேந்திரனாம். விஜய் பல்வேறு ரோல்களில் நடித்திருந்தாலும் ஆப் டிசைனர் ரோலில் இதுவரை நடித்ததில்லை எனும் காரணத்தால் இதில் வித்யாசமான விஜய்யைப் பார்க்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அதேபோல விஜய்யின் அண்மைக்கால ஆக்சன் படங்களைப் போல அல்லாமல் இது குடும்ப செண்டிமெண்ட் படமாகவும் உருவாகிவருகிறது.
மேலும் படிக்க | திருமணச் செலவைத் திருப்பிக் கேட்கும் Netflix? - நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ