சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?

Vijay Advice For His Son Sanjay In GOAT Movie : தி கோட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் தனது சொந்த மகன் சஞ்சய்க்கு அட்வைஸ் கொடுப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 5, 2024, 03:50 PM IST
  • தி கோட் படத்தில் விஜய் மகனின் பெயர்..
  • தன் மகனுக்கு அட்வைஸ் செய்தாரா?
  • என்ன சொன்னார் தெரியுமா?
சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?  title=

Vijay Advice For His Son Sanjay In GOAT Movie : கவனிக்க : தி கோட் படம் இன்னும் பார்க்காதவர்கள், ஸ்பாய்லர் படிக்க விரும்பாதவர்கள், கடைசி பத்தியை படிக்க வேண்டாம். 

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம், இன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்தும், இதில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகளின் விளக்கங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம். 

திருவிழாவான ‘தி கோட்’ படம்:

பொதுவாக, விஜய் படம் என்றாலே பலர் அதை திருவிழா பாேல கொண்டாடுவது வழக்கம். அதிலும், இன்னும் சில மாதங்களில் முழுமையாக நடிகர் விஜய் திரையுலகை விட்டு விலக இருப்பதால், தி கோட் திரைப்படம் திருவிழாக்கோலம் ஆனது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என ரசிகர்கள் பலர், டிக்கெட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். 

வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக கைக்கோர்த்திருக்கும் நடிகர் விஜய், இதில் தனது இயல்பான நடிப்பையும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். இவருடன் இணைந்து இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியாேர் நடித்திருக்கின்றனர். லைலா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்..

தி கோட் படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக, முன்னரே படக்குழுவினர் அவர்களின் நேர்காணல்களில் தெரிவித்து இருந்தனர். அதை நிரூபிக்கும் வகையில் இருந்தது தி காேட் படத்தின் முதல் காட்சி. தொடர்ந்து திரைக்கதை வேகமெடுத்தால் முதல் பாதி எப்படி சென்றது என்பதே பலருக்கு தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சிறுசிறு சறுக்கல்களால், படம் ஆங்காங்கே அடிவாங்கி, ஒரு வழியாக கடைசி 10 நிமிடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இருப்பினும், எதிர்பாராத ஓரிரண்டு ட்விஸ்ட்கள் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க | எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..

விஜய்யின் மகன் பெயர்..

தி காேட் திரைப்படத்தில், விஜய் மகனின் பெயர், ஜீவன். இவர், 5 வயதிலேயே விஜய்யின் கையை விட்டு போய், வில்லன் கைகளில் சேர்கிறார். அவருக்கு, அந்த வில்லன் கொடுக்கும் பெயர்தான், “சஞ்சய்”. இப்படி பெயர் வைத்ததற்கு பின்னால் ஒரு அர்த்தம் இருப்பதாக ரசிகர்கள் யூகித்து இருக்கின்றனர். 

Vijay Jason Sanjay

மகனுக்கு அட்வைஸ்?

நடிகர் விஜய்யின் சொந்த மகனின் பெயரும் சஞ்சய்தான். தி கோட் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் விஜய்யின் மகனை “சஞ்சய்” என அழைக்க, அதற்கு விஜய், “யார்ரா சஞ்சய்..இது ஜீவன்டா..” என்று கூறுவார். அதன் பிறகு தன் மகனிடம் விஜய் பேசுவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அப்போது, “அவன் உன்கிட்ட என்ன பேசி, எந்த நஞ்சை வெதச்சி வெச்சிருக்கான்னு எனக்கு தெரியல..” என்று உருக்கமாக கூறுவார். மேலும், “டேய்..இது உன் அப்பன் கேம் ஆட்ற நேரம்டா..” என்றும் பேசியிருக்கிறார். விஜய் உறுக்கமாக பேசும் காட்சிக்கு பிறகு, இளைய விஜய் “யார்ரா நீ..பூமர் மாறி பேசிட்டு இருக்க..” என்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது” இது இவர்களின் ரியல் வாழ்க்கையில் நடந்த உரையாடலாக இருக்குமோ என சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனாலும், இது எதேச்சியாகவும் நடந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். 

உள் நோக்கம் இருக்கிறதா?

நடிகர் விஜய்யும், அவரது குடும்பத்தினரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் படித்து வந்த சஞ்சய், சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பி படம் ஒன்றை இயக்க சைன் செய்தார். ஆனால், இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை என்று கூறப்படுகிறது. தற்பாேது தன் மகனிடம் விஜய் பேசுவதே இல்லை என்றும், இதனால்தான் மறைமுகமாக அவருக்கு இந்த படத்தில் அறிவுரை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News