சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ' 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டூடியோ' எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது.
மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு
இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து இயங்கவும் நடனத்தை கற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு கிகி சாந்தனு தொடங்கி இருக்கும் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ' சரியான வாய்ப்பினை வழங்குகிறது. கிகி சாந்தனு கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'வை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
#KikisDanceStudio expands to ADYAR!@kikivijay has opened her dance studio's 2nd branch, #Fitkits - Adyar, in a grand launch with celebs, friends & family. Let the calorie-burning fun begin this summer! Classes have started.@imKBRshanthnu
— KARTHIK DP (@dp_karthik) May 13, 2024
இந்நிலையில் இரண்டாவது கிளையை அடையாறு பகுதியில் தொடங்கியிருக்கிறார். இங்கு ஃபிட் கிட்ஸ் எனும் உடற்பயிற்சி கூடம் உள்ளது . அவர்களுடன் இணைந்து, 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'வை தொடங்கியிருக்கிறார். இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், கே. பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், திருமதி சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி சாந்தனு மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் சோர்வான மனநிலையில் வருகை தந்தாலும் அல்லது உற்சாகமற்ற சூழலில் வருகை தந்தாலும்.. உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டு.. அதற்காக உங்களுக்கு சௌகரியமான முறையில் டான்ஸ் ஆடினால்.. உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சி பரவுவதை உணர்வீர்கள். சென்னை தி. நகரை தொடர்ந்து அடையாறு பகுதியிலும் தன்னுடைய கலை சேவையை விரிவு படுத்தி இருக்கும் நாட்டிய மங்கை கிகி சாந்தனுவை திரையுலகத்தினரும், கலை உலகத்தினரும் மனதார வாழ்த்துகிறார்கள். இந்த டான்ஸ் ஸ்டுடியோவின் உள்கட்டமைப்பு.. நடன கலைஞர்கள் நடனப் பயிற்சி பெறுவதற்கு வசதியாக பிரத்யேகமான முறையிலும், சர்வதேச தரத்திலும் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் தனி சிறப்பம்சம்.
மேலும் படிக்க | கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ