நடிகை நயன்தாராவிற்கு கொரோனா என வெளியான தகவல் உண்மையில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்..!
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் திரையுலக பலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த சூல்நிலையில், படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று திரும்பிய பிரபலங்களும் தங்களது வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க அது ஒரு வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது.
READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!
சமீபத்தில் காலமான பாடகர் ஏ.எல்.ராகவன், முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்த பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நயன்தாராவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.