கேஜிஎஃப் நடிகர் உயிரிழப்பு

கேஜிஎஃப் படத்தில் நடித்த மோகன் ஜுனேஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 7, 2022, 10:41 AM IST
  • கேஜிஎஃப் நடிகர் மரணம்
  • கேஜிஎஃப் நடிகர் மோகன் ஜூனேஜா மரணம்
  • பெங்களூரில் உடலநலக்குறைவால் உயிரிழந்தார்
கேஜிஎஃப் நடிகர் உயிரிழப்பு title=

கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். 

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாயை பிராண்டாக மாற்றிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் மோகன் ஜூனேஜா.

Mohan Juneja

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வடாரா என்கிற சீரியல் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் ஜூனேஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் படிக்க | இணையத்தில் வெளியான RRR மற்றும் கேஜிஎப்-2: அதிர்ச்சியில் பட குழு

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை நடைபெறும் அவரது இறுதிச் சடங்கில் கன்னட திரையுலகினரும், ரசிகர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மேலும் படிக்க | விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News