லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன?

நடிகர் விக்ரமுடன் மாதவன் இணைந்து நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. அதேசமயம் மூன்று இயக்குநர்களுடன் இணைய அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 04:08 PM IST
  • மாதவனும் விக்ரமும் இணைகிறார்கள் என தகவல் வெளியானது
  • தற்போது அதன் உண்மை நிலை தெரியவந்திருக்கிறது
  • மூன்று இயக்குநர்களுடன் மாதவன் இணைய விரும்புவதாகவும் தகவல்
 லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன? title=

அலைபாயுதே படம் மூலம் அறிமுகமான மாதவன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கிய அவர் இறுதிச்சுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்தார். அப்படி அவர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ராகெட்ரி என்ற படத்தை இயக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் நடிகராக படத்தில் மாதவன் அசத்திவிட்டார். அதேசமயம் இயக்குநராக அவர் மேலும் மெனக்கெட்டிருக்க வேண்டுமென பலர் வெளிப்படையாகவே கூறினார்.

மேலும் இனி படம் எதுவும் இயக்கும் ஐடியாவில் இல்லை தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகவும் மாதவனும் கூறினார். இந்தச் சூழலில் மாதவனும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்தப் படம் ஐயப்பனும் கோஷியும் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. ஆனால் அப்படி யாரும் இதுவரை மாதவனை அணுகவில்லை எனவும், அந்தத் தகவல் வெறும் வதந்தி மட்டுமே எனவும் மாதவனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

Madhavan

அதேசமயம், இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்ற மாதவன் விரும்புவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்தும், விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்தும், லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2 என பிஸியாக இருப்பதாலும் மாதவனின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | அஜித்தின் சொந்த வாழ்க்கையும், துணிவும் ஒத்துப்போகும் - போனிகபூர் அசத்தல் அப்டேட்

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: அசீம் அமுதவாணன் இடையே தகராறு, வைரலாகும் வீடியோ இதோ!

மேலும் படிக்க | கவுதம் கார்த்திக், மஞ்சிமாவிற்கு இப்படி ஒரு கிப்ட் ஆ? நயன்-விக்கி ஜோடி அசத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News