நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இது? வைரலாகும் புகைப்படம்!

பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் லிவிங்ஸ்டன் தற்போது தனது மகள்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 3, 2023, 12:20 PM IST
  • லிவிங்ஸ்டன் மகள் போட்டோ வைரல்.
  • குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி உள்ளார்.
  • பல படங்களில் நடித்து உள்ளார்.
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இது? வைரலாகும் புகைப்படம்! title=

பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் நடிப்பதை தவிர சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.  இவர் முதன்முதலில் கே.பாக்கியராஜ் இயக்கிய 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்தவர், 1998ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பூந்தோட்ட காவல்காரன்' படத்தில் வில்லனாக நடித்தார்.  ரஞ்சன் என்கிற பெயரில் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வீரா' படத்திலும் லிவிங்ஸ்டன் வில்லனாக நடித்திருக்கிறார்.  

மேலும் படிக்க | Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்... இவர்தான் காரணமா?

இதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 'சுந்தரபுருஷன்' படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அதன் பின்னர் சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம் மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார்.  பல படங்களில் நடித்து பிரபலமானவர் தற்போது தனது மகள்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.  தனது குடுமபத்தினருடன் இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது, அதற்கு காரணம் இவரது இரண்டு மகள்களும் தான்.

லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்கள் இருக்கிறார்களா என ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.  இவர் 1997ம் ஆண்டு ஜெஸிஸி எனும் ஆசிரியை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என்று இரு மகள்கள் உள்ளனர்.  இவரது மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரின் மூலம் தனது நடிப்பை பயணத்தை தொடங்கினார்.  தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் 'அருவி' தொடரில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | ஹிந்தியில் ரீமேக் ஆகப்போகும் லவ் டுடே! யார் ஹீரோ தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News