ஒன்றரை வருடங்கள் மொட்டை தலைதான்... பொன்னியின் செல்வன் அனுபவம் பகிரும் ஜெயராம்

ஒன்றரை வருடங்கள் மொட்டை தலைதான்... பொன்னியின் செல்வன் அனுபவம் பகிரும் ஜெயராம்

Written by - க. விக்ரம் | Last Updated : May 14, 2022, 03:54 PM IST
  • செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது பொன்னியின் செல்வன்
  • ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராம்
 ஒன்றரை வருடங்கள் மொட்டை தலைதான்... பொன்னியின் செல்வன் அனுபவம் பகிரும் ஜெயராம் title=

தமிழ் இலக்கியங்களில் பொன்னியின் செல்வன் நாவல் ஒரு வைரக்கல் என பலரால் புகழப்படுகிறது. எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலுக்கு இன்றுவரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை படமாக எடுக்க எம்ஜிஆர் உள்ளிட்டோர் முயன்றும் முடியாமல் போனது. 

இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக எடுக்கிறார். லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன

Ponniyin Selvan

இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

மேலும் படிக்க | விஜய் டிவிக்கு மீண்டும் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்?

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ மணிரத்னம் படத்தில் நடிக்க எந்த மொழி கலைஞராக இருந்தாலும் ஆசைப்படுவார். ஆசைப்படுவர். எனக்கு இருந்த அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. அதுவும் பொன்னியின் செல்வன் மாதிரியான படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது மிகவும் சந்தோஷம்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு அஜித் வருவாரா?... ஆதி விளக்கம்

அதுவும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம். அது எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பது பலருக்கும் தெரியும். மணிரத்னமுடன் பணி செய்வது வேறு மாதிரியான அனுபவம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஷூட்டிங் இல்லாதபோது நான் உங்களிடம் உதவி இயக்குநராக பணி செய்யலாமா என்று மணிரத்னத்திடம் கேட்டேன். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தால் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

கதை சொல்லி முடித்தவுடன், ‘முழுவதுமாக மொட்டைப் போட வேண்டும். அடுத்த ஒன்றரை வருடங்கள் தலையில் முடியே இருக்க கூடாது. குடுமி மட்டும் இருக்க வேண்டும்’ என்றார். 

ஷூட்டிங்கின்போது அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட வேண்டும்.  3.40 மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு சென்றுவிட வேண்டும். தினமும் காலையில் ஷேவ் செய்ய வேண்டும். காலை 4லிருந்து 4.30 மணிக்குள் சாப்பாடு தயாராக இருக்கும். 6 மணிக்கு முதல் ஷாட் எடுக்கப்பட்டுவிடும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News