அர்ஜூனின் 2வது மகளின் காதலர்! இவரும் நடிகரா? வைரலாகும் புகைப்படம்..

Anjana Sarja Boyfriend Photos : அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம்? அவரும் ஒரு நடிகரா? வைரலாகும் போட்டோஸ்..  

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2024, 07:53 AM IST
  • ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு 2 மகள்கள்
  • மூத்த மகளுக்கு சமீபத்தி திருமணம் முடிந்தது
  • இளைய மகளுக்கு பாய் ஃபிரண்டா?
அர்ஜூனின் 2வது மகளின் காதலர்! இவரும் நடிகரா? வைரலாகும் புகைப்படம்.. title=

Anjana Sarja Boyfriend Photos : நடிகர் அர்ஜூனின் மூத்த மகளுக்கு திருமணம் முடிவு பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது மகள் அஞ்சனாவின் காதலன் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். நாட்கள் செல்ல செல்ல, அவருக்கு மார்கெட் குறைந்ததை தொடர்ந்து பின்பு வில்லனாக சில படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. 

ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திருமணம்!

தமிழில் வெகு சில படங்களில் மட்டும் நடித்திருப்பவர், ஐஸ்வர்யா அர்ஜுன். அர்ஜுனின் முதல் மகளான இவர், தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம், பட்டத்து யானை. இதில் அவருக்கு ஜோடியாக விஷால் நடித்திருந்தார். இந்த படம் பெரிதளவில வெற்றி பெறாததை தாெடர்ந்து, தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து மொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர், சுய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், இவருக்கும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஆடம்பர திருமண மண்டபத்தில் இருவருக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

இரண்டாவது மகள்..!

மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்து ஒருவழியாக விழாக்கோலம் ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவுகிறது. இதற்கு காரணம், அர்ஜுனின் இரண்டாவது மகள் வெளியிட்ட ஒரு புகைப்படம்தான் என்றும் பேசப்படுகிறது. அர்ஜுனின் இளைய மகள் பெயர், அஞ்சனா. இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | Anjana Arjun : ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளை பார்த்துள்ளீர்களா?

காதலனா? 

அஞ்சனா, தனது சகோதரியின்  திருமண கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைதான் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சேர்த்திருப்பதுடன் கடைசியில், வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் தனது பாட்டியும் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவர்தான், ஒரு வேலை அஞ்சனாவின் காதலரா…? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Anjana Arjun

இவர் நடிகரா என ரசிகர்கள் சந்தேகப்பட, அவர் அஞ்சனாவின் நெருங்கிய நண்பராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

என்ன செய்கிறார் அஞ்சனா? 

வழக்கமாக சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, அனைத்து துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளுமே அவரவர் பெற்றோர்கள் இருந்து துறையில் தலை எடுப்பது வழக்கம். அந்த வகையில், நடிகரான அர்ஜுனின் மகள்களும் திரையுலகிற்குள் பிரவேசிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த மகள் சினிமா செட் ஆவாதவுடன் நைஸாக திரையுலகை விட்டு விலகிக்கொள்ள, இளைய மகளும் அந்த ரூட்டையே ஃபாலோ செய்தார். தற்போது, தனியாக தனக்கென தனியாக ஒரு பிராண்டை கிரியேட் செய்திருக்கும் அவர், அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். இது ஒரு ஹேண்ட்பேக் பிராண்ட் ஆகும். 

மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News