PUSHPA PART 3: ஒன்னு இல்ல, ரெண்டுள்ள மூணாவது பார்ட்டும் உண்டு: அதிரடி காட்டும் புஷ்பா

Triple Treat from Team PUSHPA: புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 20, 2022, 03:04 PM IST
  • புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • இரண்டாம் பாகத்தில் ஃபஹத் பாசில் நடிக்க இருக்கிறார்.
  • புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும்
PUSHPA PART 3: ஒன்னு இல்ல, ரெண்டுள்ள மூணாவது பார்ட்டும் உண்டு: அதிரடி காட்டும் புஷ்பா title=

புதுடெல்லி: அல்லு அர்ஜுன் சர்ப்ரைஸ்: புஷ்பா மூன்றாம் பாகமும் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில வெளியாகி அபார வெற்றியடைந்து புஷ்பா திரைப்படம். படத்தின் வெற்றிக்கு பின்னர் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு மத்தியில் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி மட்டுமல்ல, மூன்றாம் பகுதியும் வெளியாகும் என்ற செய்தி, ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையினர் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியளித்துள்ளது.

'புஷ்பா-2' படம் குறித்த செய்திகள வெளியாகிக்கொண்டே இருக்க்கும் நிலையில், அதன் அடுத்த பாகமும் தயாராகிறது என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படத்தின் முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார், இவரது இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்து வருகிறது. மிகவும் வைரலான பாடல்கள் புஷ்பா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மேலும் படிக்க | ஒரு பாடலுக்கு 25 நாட்கள் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!

 2021ஆம் ஆண்டின் இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த வெற்றிப்படமான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா: தி ரூல்' ரசிகர்களுக்கு ட்ரீட் என்றால், மூன்றாம் பாகம் என்ற நினைப்பே டபுள் விருந்தாக இருக்கும் என்று ரசிகர்கள் மகிழ்கின்றனர். 

அல்லு அர்ஜுன் ஸ்டைலில், புஷ்பா படத்தின் பாடல்களில் நடித்து, அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்வதில் பலரும் இன்னும் ஈடுபட்டிருக்கின்றனர்.  

புஷ்பா 3 படமும் விரைவில் தயாராகும்

படத்தில் நடித்த நடிகர் ஃபஹத் பாசில் புஷ்பா திரைப்படம் குறித்து ஒரு பேட்டியின் போது ஒரு பெரிய அப்டேட் கொடுத்தார். 'மலைக்குஞ்சு' படத்தின் ப்ரோமோஷனின் போது, புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தொடர்பாக அவர் தெரிவித்தர்.

​​சமீபத்தில் புஷ்பா திரைப்பட இயக்குனருடன் பேசியபோது, ​​சுகுமார் தனக்கு ஒரு குறிப்பைக் கொடுத்ததாகவும், படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் ஃபஹத் பாசில் கூறினார்.

மேலும் படிக்க | திருமணச் செலவைத் திருப்பிக் கேட்கும் Netflix? - நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

ஒரு பாகம் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது

'புஷ்பா' படத்தின் கதையை சுகுமார் தன்னிடம் கூறியபோது, ​​ஒரு பாகம் மட்டுமே எடுப்பதாக பேச்சு என்றும், ஆனால் படத்தின் ஷூட்டிங் போலீஸ் ஸ்டேஷன் என்ற இடத்தை எட்டியவுடன், இரண்டாம் பாகத்தையும் இரண்டாக, அதாவது மூன்று பாகங்களாக திரைப்படத்தை எடுக்கும் அளவுக்கு இயக்குனர் சுகுமாரிடம் தரவுகள் இருக்கிறதாக தெரியவந்தது என்று தெரிவித்தார். 

சமூக ஊடகங்களில் வீடியோ

ஃபஹத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை அவர் பகிர்ந்துகொண்டது, ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டி விட்டிருக்கிறது. புஷ்பா மூன்றாம் பாகம் வெளிவரும் என்ற செய்தி, அண்மையில் வெளிவந்த பிற இரு ப் ஆக திரைப்படங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | அஞ்சான் பார்ட் 2-வா 'தி வாரியர்'? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News