2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இதற்கும் பிச்சைக்காரன் படத்திற்கும் ஒரு கனெக்க்ஷன் இருக்கிறது. அது பற்றி முழுமையாக இந்த செய்தியில் படிக்கலாம். கடந்த 2016 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்று கொண்டார். அப்போது அவர் கொண்டு வந்த மிகப்பெரிய விஷயம் பணமதிப்பிழப்பு. அதாவது 500 ,1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ஒரே இரவில் அறிவித்தார். அது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று அந்த நேரத்தில் சொல்லப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே அதே 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் வந்த பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டி இருப்பார். மேலும் இந்த படத்தில் தான் நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்ய வேண்டும் ஏனென்றால் அவை அளவுக்கு அதிகமாக பணத்தை வைத்திருக்கும் ஊழல்வாதிகளிடம் அதிகம் இருப்பதாக ஒரு காட்சி இருக்கும். இந்த படத்தை பார்த்த பலரும் அந்த நேரத்தில் "இந்த ஐடியா கூட நல்லா இருக்கே என்று விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தனர்". இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிச்சைக்காரன் படம் வைரலாக பேசப்பட்டது அன்றே கணித்தார் விஜய் ஆண்டனி என்பது போன்ற மீம்ஸ் மிகவும் வைரலானது.
இந்நிலையில் சரியாக 7 ஆண்டுகள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை 2000 நோட்டுகள் இனி செல்லாது, இந்த நோட்டுகளை வைத்திருப்போர் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த செய்தி வெளியானதும் இதனை பிச்சைக்காரன் 2 படத்தோடு ஒப்பிட்டு வருகின்றனர், காரணம் பிச்சைக்காரன் படமும் அதே வெள்ளிக்கிழமை தான் வெளியானது. பிச்சைக்காரன் 2 வெளியான அதே நாளிலேயே 2000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே பிச்சைக்காரன் படத்திற்கும், விஜய் ஆண்டனிக்கும், பண மதிப்பிழப்புக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஒருவேளை பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகம் வெளியானால் வேறு எந்த மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வருவார்கள் என்று நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI... வெளியான பரபரப்பு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ