நாளை காலை 100% காதல் படத்தின் பூஜை!!

Last Updated : Oct 10, 2017, 08:39 PM IST
நாளை காலை 100% காதல் படத்தின் பூஜை!!  title=

கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 100% காதல் படத்தை தயாரிக்கின்றனர். எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசை இவரே அமைக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. நாளை முதல் படம்பிடிப்பு ஆரம்பம். அதற்கான பூஜை நாளை காலை 8.45 மணிக்கு ஏவிஎம் உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெறுகிறது. 

இப்படம் 2011-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான 100% லவ் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கே '100% காதல்' என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News