பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி

Last Updated : May 19, 2017, 02:16 PM IST
பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி title=

உலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. 

உலகம் முழுவதும் வெளியாகி பாகுபலி 2 ரூ. 1௦00 கோடி ருபாய் வசூல் என்ற சாதனை மைல் கல்லை எட்டியதோடு, ரூ. 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

இந்நிலையில் பாகுபலி 2 இன்று ரூ. 1500 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 940 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபால் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் ஈட்டிவருகிறது. பாகிஸ்தானில் இதுவரை ரூ 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

விரைவில் சீனாவிலும் வெளியாக உள்ளது. அங்கு வெளியான பிறகு 2000 கோடி ரூபாய் வரை வசூல் புரியும் என்று கூறப்படுகிறது.

 

 

Trending News