இளவரசர் ஹாரி இவர் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் ஆவார். இவர், தன்னைவிட 3 வயது அதிகமான அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தையடுத்து, இருவரின் திருமணமும் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயமானது. இதனை தொடர்ந்து, இன்று இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இவர்களது திருமண புகைப்படங்கள் முன்னதாக சமூக வலையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.
இந்த திருமணத்தை முன்னிட்டு வின்ட்சர் நகரம் முழுவதம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமணத்தை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார். இந்த மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வரவுள்ளனர். அதைத்தொடர்ந்து திருமண ஆராதனை நடைபெறுகிறது.
திருமணம் முடிந்ததும், மணமக்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள். இதனால் அந்த வீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள
அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் வரவேற்பு நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் வெட்டும் கேக்கை லண்டன் வயலட் பேக்கரி தயாரித்துள்ளது. மாலையில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியருக்கு ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கிறார். இதில் மணமக்களும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பார்கள்.
ஹாரி - மேகன் திருமணத்தை முன்னிட்டு வின்ட்சர் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மணமக்களின் வருகையை காண்பதற்காக ஏராளமான மக்கள் வீதிகளில் அமர்ந்துள்ளனர்.
Prince Harry becomes His Royal Highness The Duke of Sussex, and Ms. Meghan Markle on marriage will become Her Royal Highness The Duchess of Sussex: Kensigton Palace statement (file pic) pic.twitter.com/y0QrtstAvp
— ANI (@ANI) May 19, 2018