மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க காலை 9.05 இனிதே நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதையடுத்து, சித்திரை திருவிழாவின் 10-ம் நாளான இன்று பெண்கள் மிகவும் போற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப் பெருமானும், பவள கனிவாய் பெருமாளும் எழுந்தருள மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற சமயத்தில் பெண்கள் பலரும் தங்களின் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
மீனாட்சி திருக்கல்யாணம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர்.