மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம்... 5 ஆண்டுகளில் ₹6 லட்சம் வட்டி கிடைக்கும்!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2023, 05:00 PM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும்.
  • இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி விலக்கு பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம்... 5 ஆண்டுகளில் ₹6 லட்சம் வட்டி கிடைக்கும்! title=

வயோதிகத்தில் பெரிய பிரச்சனை வழக்கமான வருமானம் தான். இதற்காக, ஓய்வு பெறும் போது பெறப்படும் தொகையை சரியான இடத்தில் முதலீடு செய்தால், மூத்த குடிமக்கள் உட்கார்ந்து கொண்டே அதிக வட்டி பெறலாம். உத்தரவாதமான சிறந்த வட்டியை வழங்கும் பல திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பையும், அதிக வட்டியையும் அத்தகைய முதலீட்டிற்கான நல்ல திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பான திட்டமாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் விரும்பினால், இந்த திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 6 லட்சம் ரூபாயை வட்டியில் இருந்து மட்டுமே சம்பாதிக்க முடியும். இந்த திட்டம் தொடர்பான சிறப்பு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகபட்சம் 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தொகை 1000 மடங்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது. காலாண்டு அடிப்படையில் வைப்புத் தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது.

டெபாசிட் செய்த தொகைக்கு 6 லட்சம் வட்டி பெறும் வழி

இப்போது டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 6 லட்சம் வட்டி எப்படி கிடைக்கும் என்ற கேள்வி வருகிறது? மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய நிலவரப்படி, 8 சதவீத வட்டி கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், SCSS கால்குலேட்டரின் படி, ஐந்து ஆண்டுகளில் நீங்கள் 6,00,000 ரூபாய் வட்டியாக 15 லட்சத்திற்கு மட்டுமே பெறுவீர்கள். இந்தத் தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்காக வழக்கமான வருமானத்தை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டு.. வைரலாகும் தகவல்... உண்மை என்ன!

திட்டத்தின் நன்மைகள்

1. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும், எனவே இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

2. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரி விலக்கு பெறலாம்.
 
3. முதலீட்டுப் பார்வையில் ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் மிகவும் அதிக வட்டியாகும்.

4. இந்தக் கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

5. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களின் முதல் நாளில் உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும்.

கணக்கை திறக்கும் முறை

எந்தவொரு தபால் அலுவலகம் அல்லது பொது / தனியார் வங்கிகளில் இந்தக் கணக்கைத் திறக்க, நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், அத்துடன் இந்த படிவத்தை இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்று மற்றும் பிற KYC ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கியில் கணக்கைத் திறப்பதன் நன்மை என்னவென்றால், வைப்பு வட்டியை வங்கிக் கிளையில் உள்ள வைப்புதாரரின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க முடியும். கணக்கு அறிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மேலும் படிக்க | இந்த வேலைகளை இன்னும் செய்யலையா? கடைசி நிமிட எச்சரிக்கை @மார்ச் 31

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News