தனது 50 வயதான அம்மாவுக்கு மணமகனைத் தேடுவதாக ட்விட்டரில் பதிவிட்ட இளம்பெண்ணின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு வயதான பெண்மணி மறுமணம் செய்ய விரும்புவதைப் பற்றி எந்தவிதமான ஊக்கமும் நேர்மறையான உரையாடலும் இல்லாத நேரத்தில், ஆஸ்தா வர்மா என்ற ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ள இந்த பதிவு ட்விட்டர் பயனர்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ளார்.
இந்திய சமுதாயத்தில், ஒருவரின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களுக்கு வாழ கற்றுக்கொள்வது குறித்து சில ஊகங்கள் உள்ளன. எனவே ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துகொள்வது, ஒரு குடும்பத்தைத் தொடங்குவது மற்றும் உறுதியுடன் இருப்பது போன்ற விதிமுறைகள் எப்போதும் உள்ளன. இத்துனை ஊகங்களுக்கும் மத்தியில் ஆஸ்தா தனது வயதான அம்மாவுக்கு மணமகன் தேடுவதாக தைரியத்துடன் உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில்., எனது அம்மாவுக்கு ஒரு சைவ, குடிப்பழக்கம் இல்லாத, நன்கு நிறுவப்பட்ட மணமகனைத் தேடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் பயனர்களிடம் பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது. மற்றும் நெட்டிசன்கள் ஆஸ்தாவின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.
Looking for a handsome 50 year old man for my moth
Vegetarian, Non Drinker, Well Es Groomhunting pic.twitter.com/xNj0w8r8uq— Aastha Varma (@AasthaVarma) October 31, 2019
ஆஸ்தாவின் பதிவிற்கு பதில் அளித்துள்ள பலர், விரைவில் அவரது அம்மாவுக்கு ஒரு மணமகனை கண்டுபிடிக்க தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த ட்வீட் ஆனது ஒரு நாளில் சுமார் 19,000 லைக்குகளையும் 4,800 ரீட்வீட்களையும் நெருங்கியுள்ளது. ஆக இந்த ட்வீட் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது என்பதை நம்மாள் உணர முடிகிறது.
சிலர் ஆஸ்தாவை, திருமண தகவல் மையத்தின் உதவியை நாட கோரியபோது... தான் ஏற்கனவே திருமண தகவல் மையத்தின் உதவியை நாடியதாகவும், அங்கு தன் அம்மாவுக்கு ஏற்ற மாப்பிளை கிடைக்கவில்லை எனவும் ஆஸ்தா குறிப்பிட்டுள்ளார். என்றபோதிலும் ஆஸ்தாவின் இந்த முயற்சிக்கு ட்விட்டர் பயனர்களிடம் இருந்து ஆதரவு மெம்மேலும் பெருகி வருகிறது.