பிஜார்ட்வென் போலார் என்பது ஒவ்வொரு பயண விரும்பியின் கனவு!
30 மைல் டிகிரி வெப்பநிலையில் பனி மூடிய சூழலில், 300-கிமீ ஆர்க்டிக் பயணம். இப்பயணத்தில் திரமைமிக்க, நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுடன் நம்மைப் போல் சாதரண மனிதர்களின் வாழ்நாள் இறுதி சாகசம்.
உலகெங்கிலும் இருந்து பன்னிரெண்டு நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் இம்பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் ஒருவர் இந்த சாகசத்திற்கா தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த ஆண்டிற்கான பயணத்தில் இந்தியாவை சேர்ந்த, 26 வயதான, கேரளாவின் புனலூர் சொந்த ஊரான நியோக் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
1997-ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை இந்த சாகசப் பயணம் படையெடுக்கின்றது. இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் வரவு நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது.
இதில் நியோக்-ன் பெயர் தற்போது முன்னிலையில் உள்ளது, அவருக்கு அடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த முஷாயித் சாஹா இடம்பெற்றுள்ளார். இவ்விருவருக்கும் இடையேயான போட்டி பலமாக நடந்து வருகின்றது.
இன்னும் இரண்டு நாட்களே ஆன்லைன் வாக்கெடுப்பு காலம் மீதமுள்ளது. இந்நிலையில் யார் இந்த வாய்ப்பை வெள்வார் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறு வாக்களிப்பது?
Vote for Niyog என்ற இணைப்பை கிளிக் செய்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்!