SBI vs Post Office: FD-இல் சிறந்தது எது...? - முழு விவரம்

SBI vs Post Office FD: எஸ்பிஐ வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் ஒப்பீட்டையும், எந்தெந்த திட்டங்கள் யார் யாருக்கு நன்மை பயக்கும் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 17, 2023, 12:05 PM IST
  • FDஇல் அதிக லாபம் கிடைக்கும்.
  • ரெப்போ ரேட் உயர்வால் FD வட்டி உயரும்.
  • FD நிலையான வருமானத்தை தரும்.
SBI vs Post Office: FD-இல் சிறந்தது எது...? - முழு விவரம் title=

SBI vs Post Office FD: முதலீடு செய்வதற்கு பல்வேறு ஆப்ஷன்கள் இருந்தாலும், இன்றும் கூட ஒரு பெரிய பிரிவினர் உறுதியான வருமானம் தரும் நிலையான வைப்புத் திட்டத்தை (Fixed Deposit) தான் நம்புகின்றனர். மக்கள் பொதுவாக வங்கியில் FD திட்டத்தின் மீது ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் வங்கியிலும் தபால் நிலையத்திலும் நீங்கள் FD திட்டத்தில் முதிலீடு செய்யலாம். இது அஞ்சல் அலுவக டைம் டெபாசிட் அல்லது அஞ்சல அலுவலக வைப்புத்தொகை திட்டம் எனப்படும்.

எஸ்பிஐ vs அஞ்சல் அலுவலகம்

நீங்கள் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் FD செய்து கொள்ளலாம். வங்கியைப் போலவே, தபால் நிலையத்திலும் வட்டி விகிதங்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். நீங்கள் எஸ்பிஐ வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், அங்கு எஃப்டியில் எவ்வளவு லாபம் கிடைக்கும், அதே எஃப்டியை அஞ்சலகத்தில் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். வட்டி விகிதங்களை அறிந்த பிறகு, உங்களின் நன்மை என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

எஸ்பிஐ FD

முதலில், எஸ்பிஐ FD திட்டத்தில் நீங்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு பெறலாம் மற்றும் வட்டி விகிதங்களும் ஆண்டுக்கு ஏற்ப வேறுபடும். எஸ்பிஐயில் குறுகிய கால FD 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை ஆகும். இதில், உங்களுக்கு 3% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 3.50% வட்டியும் கிடைக்கும். 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 4.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.00%, ம180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 5.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.75%, 211 நாட்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கு குறைவான FDகளுக்கு 5.75% மற்றும்  மூத்த குடிமக்களுக்கு 6.25% வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரயிலின் கடைசி பெட்டியில் ஏன் 'X' இருக்கு தெரியுமா...? - ஆனால் வந்தே பாரத்தில் இல்லை!

1 ஆண்டுக்கு மேல் ஆனால் 2 ஆண்டுகளுக்கு குறைவானவர்களுக்கு பொது மக்களுக்கு 6.80% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு குறைவாக 7.00% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50%. இது தவிர, 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு, வங்கி தற்போது பொது மக்களுக்கு 6.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.00% வட்டி வழங்குகிறது.

அஞ்சல் அலுவலக FD

இப்போது அஞ்சல் அலுவலக  FD பற்றி காணலாம். இங்கு 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு FDஇல் முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் அனைத்து வகை மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். தற்போது, 1 ஆண்டு வரையிலான FDகளுக்கு 6.90% என்ற விகிதத்தில் வட்டி பெறப்படுகிறது. நீங்கள் இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் வரை FD-இல் முதலீடு செய்தால், உங்களுக்கு 7.00% வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், 5 ஆண்டுகளில் 7.50% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.

எத்தனை ஆண்டுகளுக்கு FD பெறுவதில் லாபம் எங்கே?

அத்தகைய சூழ்நிலையில், அஞ்சல் அலுவலகம் மற்றும் எஸ்பிஐ வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், எஸ்பிஐயில் நீங்கள் 6.80% என்ற விகிதத்தில் 1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கும் குறைவான வட்டியைப் பெறுகிறீர்கள், அதேசமயம் அஞ்சல் அலுவலகத்தில் வட்டி இங்கே கொடுக்கப்படுகிறது. 1 வருடம் வரையிலான FDகளில் 6.90% என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. 

நீங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் FD செய்துவிட்டால், சாமானியர்களுக்கு அதே விகிதத்தில் அதாவது 7.00% அஞ்சலகம் மற்றும் SBI இரண்டிலும் வட்டி கிடைக்கும். இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐயில் 7.50% வட்டி கிடைக்கும். ஆனால் நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் FD பெற விரும்பினால், அதன் நன்மை அஞ்சல் அலுவலகத்தில் உள்ளது. இங்கு, 7.50% படி, அனைத்து வகை மக்களுக்கும் வட்டி வழங்கப்படும். மறுபுறம், எஸ்பிஐயில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான எஃப்டிகளுக்கு, பொது நபருக்கு 6.50% வட்டியும், மூத்த குடிமகனுக்கு 7.00% வட்டியும் கிடைக்கும்.

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்..! யார் அந்த தங்கமான ராசி உடையோர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News