பெற்றோர்கள் பலர், குழந்தைகள் பொய் கூற ஆரம்பிக்கும் போது “நாம் சரியாகத்தான் குழந்தையை வளர்க்கிறோமா..?” என்று அவர்களை அவர்களே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவர். ஆனால், குழந்தைகள் பொய் கூறுவது முழுக்க முழுக்க பெற்றொர்களின் தவறு அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பல பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகள் தங்களிடம் பொய் கூறினால் பிடிக்காது. அவர்களை எப்படி கண்டிப்பது என்று தெரியாமல் தவிப்பர். அதை தவிர்க்க இங்கு சில வழிமுறைகளை பார்ப்போம் வாங்க.
குழந்தைகள் பொய் கூறுவதற்கான காரணங்கள்:
குழந்தைகள் பொய் கூறுவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தவிர்க்க வேண்டுமென்றால் உடனடியாக அந்த விஷயத்தில் பொய் கூற ஆரம்பித்து விடுவர். குழந்தைகளுக்கு வாழ்க்கை படிப்பினைகள் பெரிதாக இருக்காது. அதனல், அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று தெரிந்தால் பெற்றோர்கள் பெரிதாக அதற்கு ரியாக்ட் செய்யாமல் அந்த குழந்தை ஏன் பொய் கூறியது என்று யோசிக்க வேண்டும்.
மேலும் படிக்க | 60 வயதில் ரூ.10 கோடி கையில் இருக்கும்... சில முதலீட்டு டிப்ஸ் ஒதோ..!!
ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கையில் நாம் தட்டு தடுமாறி சில விஷயங்களை செய்வது போலத்தான் குழந்தைகளும் வளர்கையில் சில விஷயங்களை செய்வர். அதன் விளைவுகளை அவர்கள் அறிய மாட்டார்கள். அதனால், குழந்தைகள் பொய் கூரும் போது அவர்களை அதட்டி-மெரட்டி நெரிப்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கலாம்.
ஒழுங்கு படுத்துவது எப்படி..?
>குழந்தை பொய் கூறுவதை கண்டு பிடிப்பது கொஞ்சம் வித்தியாசமான நேரமாக இருக்கும். குழந்தையின் வயதை பொறுத்து அவர்கள் கூறும் பொய்யின் ஆழத்தையும் அதன் விளைவுகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறலாம்.
>உங்கள் குழந்தை பொய் கூறுவதை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உடனடியாக அதில் கவனம் செலுத்த வேண்டும்.
>குழந்தைகள் கூறும் பொய்களில் ஒரு சில, குற்றமற்றவையாக இருக்கலாம். ஆனால், அது பிறருக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும். அப்படி இன்னொருவரை இழுத்து குழந்தைகள் பொய் கூறினால், அது எந்த வகையான தாக்கத்தை அந்த நபரிடம் ஏற்படுத்தும் என்பதை குழந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.
>பெரும்பாலான பொய்கள் பயத்தின் வெளிபாடாகவே இருக்கும். அதனால் உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்குங்கள். குழந்தை பொய் கூறியது தெரிந்தா, அவர்களை அடிக்காமல் திட்டாமல் பொறுமையாக என்ன பிரச்சனை, ஏன் பயப்படுகிறாய் என்று காது கொடுத்து கேட்க வேண்டும்,
>சில குழந்தைகளுக்கு சரமாரியாக பொய் கூற வரும். இது, அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இந்த வகை குழந்தைகளிடம் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அவர்களின் பயத்தை தூண்டும் வகையில் எதையும் செய்ய கூடாது
>குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது பல பெற்றோர்களுக்கு சவாலாக இருக்கும். அம்மா, அப்பா, குழந்தை ஆகிய மூவரில் பெரியவர்கள் பெற்றோர்களே அன்றி குழந்தைகள் அல்ல. அதனால், பெரியவர்கள் முதலில் குழந்தையின் குணாதிசயத்தை தெரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தெரிந்த விஷயங்கள், அவர்கள் கூறும் சில குழந்தைகளுக்கு பிடிக்காமல் போய் விடும். இதையெல்லாம் கூறுவதற்கு முன்னர் பிள்ளைகளின் நம்பிக்கையை பெறுவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,
>பொய் கூறினால் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்தான் குழந்தைகள் பொய் கூறுகின்றனர். இது குறித்து அவர்களிடம் பேசுகையில், பொய் கூறாமல் ஒரு விஷயத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை அவர்களிடம் எடுத்துரைக்கலாம். இது குறித்த கதைகள் இணையத்தில் பல உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி “பொய் சொல்வது தவறு” என கற்பிக்கலாம்.
>குழந்தைகள், தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியமான சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தால் அதை அவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். கண்டும் காணாதது போல விடக்கூடாது. அப்படி இருந்தால்தான் குழந்தைகள் உங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வர்.
>ஒரு சில குழந்தைகள் தாங்கள் தவறு செய்துவிட்டதை பின்னர் பெற்றோரிடம் வந்து கூறுவர். அப்படி அவர்கள் கூறி உங்களிடம் மன்னிப்பு தெரிவித்தால் கண்டிப்பாக அவர்களை மன்னித்து, ஏன் அவ்வாறு பொய் கூறினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இது, அடுத்த முறை இவ்வாறு தவறு ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும்.
மேலும் படிக்க | கவனம் பயணிகளே... ரயிலில் டிக்கெட் எடுத்த பின் உடனே இதை சரி பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ