Ice Water Face Wash : முகம் கழுவுவது, நமது அழகை பராமரிக்க மட்டுமல்ல சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். இதனால், முகம் பொலிவாவதுடன் கருமையும் அகலும். சிலர், சாதாரணமான தண்ணீரில் முகம் கழுவுவர். இன்னும் சிலர், ஐஸ் வாட்டரில் முகம் கழுவுவர். இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
முகத்துளைகளை இறுக்கமாக்குகிறது:
குளிரான வெப்பநிலை, ரத்த நானங்களை பாதுகாக்க உதவுகிறது. இதனால், முகத்தில் இருக்கும் துளைகள் இறுகி, வெளியில் இருந்து பார்க்கும் போது அந்த துளைகளை சிறியதாக காண்பிக்கும். இதனால், முகத்தில் இருக்கும் துளைகளை நீக்கவும், ஐஸ் வாட்டர் உதவும்.
முக வீக்கத்தை குறைக்கும்:
குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால், முகத்தில் இருக்கும் வீக்கம் குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக கண்களை சுற்றி இருக்கும் தசைகள், தூக்கமின்மை மற்றும் வேறு சில சரும பிரச்சனைகளால் அவ்வப்போது வீங்கிவிடும். சமயங்களில் சிவப்பாகவும் தோன்றும். இதை சரி செய்ய, ஐஸ் தண்ணீரில் முகம் கழுவலாம்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:
ஐஸ் தண்ணீரில் முகம் கழுவவதால், சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், முகம் ஹெல்தியாக இருப்பதுடன், பளிச்சென்ற பொலிவும் பெறும்.
வீக்கத்தைத் தணிக்கிறது:
முகத்தில் ஏதேனும் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதை சரிசெய்ய ஐஸ் தண்ணீரில் முகம் கழுவலாம். இதனால், முகத்தில் இருக்கும் அசௌகரியத்தை குறைக்கலாம். இதை சரிசெய்வதோடு, தொடர்ந்து ஐஸ் தண்ணீரில் முகம் கழுவுவதால் அது வராமலும் போகலாம்.
புத்துணர்ச்சி:
ஒரு கடினமான நாளுக்கு பிறகு புத்துணர்ச்சியாக உணர வேண்டும் என்று தோன்றும். அப்போது, ஐஸ் தண்ணீரில் முகம் கழுவுவதால், முகம் புத்துணர்ச்சி உணர்வுடன் இருக்கும். இதனால், சரும நலன் மேம்படுவதுடன் மன நலனும் மேம்படுகிறது. தினமும் காலையில் வர்க்-அவுட் முடித்து விட்டு குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதாலும், வெயிலில் இருந்து வந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதாலும் புத்துணர்ச்சியுடன் உணரலாம்.
மேலும் படிக்க | பிறர் மனம் கோணாமல் ‘நோ’ சொல்வது எப்படி? ஈசியான வழிகள்!
சரும நெகிழ்வு தன்மை:
தினமும் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால், சருமம் மிகவும் மென்மையாகவும் நெகிழ்வு தன்மை (Flexibility and Elasticity) அதிகரிக்கும். இதனால், முகத்தில் இருக்கும் சுருக்கங்களும் நீங்கும்.
முகத்தில் எண்ணெய் வடிதல்:
பலருக்கு, எண்ணெய் வடியும் முகமாக இருக்கும். இதனால் முகப்பருக்கள், சருமம் பிசுபிசுப்பாவது போன்ற பிரச்சனைகள் வரலாம். இதை சமாளிக்க, ஐஸ் தண்ணீரில் முகம் கழுவலாம். எண்ணெய் வடியும் சருமம் கொண்ட முகம் இருப்பவர்களுக்கு, குளிர்ந்த நீர் அருமருந்தாக விளங்குவதாக கூறப்படுகிறது.
சரும பொருட்களின் நலனை எடுத்துக்கொள்ளும்:
பெரும்பாலானோர், தங்களின் சரும நலனை பாதுகாப்பதற்காக, ஸ்கின் கேர் பொருட்களை உபயோகிக்கின்றனர். பல சமயங்களில் இந்த சரும பொருட்கள் முகத்தில் படராமல், அதன் நலன்கள் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்துவிடும். இதை தவிர்க்க, ஐஸ் தண்ணீரில் முகம் கழுவலாம். சரும நலனுக்காக மட்டுமன்றி, சரும பொருட்களின் நலனை உறஞ்சிக்கொள்வதற்காகவும் இதை உபயோகிக்கலாம்.
மேலும் படிக்க | கணவர் சன்டே கிரிக்கெட் விளையாடப்போவது பிடிக்கலையா... அப்போ மனைவிகள் இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ