Weekly Horoscope: மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்

இந்த வாரம் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் உண்டு; காதால் கேட்பதை விட கண்ணால் பார்ப்பதையே நம்புவது நல்லது மிதுன ராசிக்காரர்களே....  

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2022, 07:50 AM IST
  • இந்த வாரம் மிதுன ராசிக்காரருக்கு எச்சரிக்கை தேவை
  • பொது இடங்களில் கவனம் தேவையான 4 ராசிக்காரர்கள்
  • பண வரவு பெறும் 3 ராசிக்காரர்கள்
Weekly Horoscope: மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும் title=

Weekly Horoscope: இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்? சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் எவர்? 

எதிர்வரும் வாரத்திற்கான பொதுவான ராசிபலன்கள் இவை. இவற்றை சிக்னலாக எடுத்துக் கொண்டால், வாழ்க்கை சுலபமாகலாம். 22 முதல் 29 மே வரையிலான ராசிபலன்...

இந்த வாரம் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் உண்டு; காதால் கேட்பதை விட கண்ணால் பார்ப்பதையே நம்புவது நல்லது மிதுன ராசிக்காரர்களே....  

இந்த வாரம், 3 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தால், 4 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த வார ராசிபலன்.

மேஷம்: இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதையும் சண்டையிடுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம். நிதிநிலை சாதாரணமாகவே தொடர்ந்தாலும், வார இறுதியில் பணவரவு இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், வாழ்க்கைத்துணையின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்: நிதானம் தேவை ரிஷப ராசிக்காரரே! ஒருபுறம் பண ஆதாயம் இருந்தாலும், குடும்பத்தில் செலவுகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். காதல் உறவு மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைகள் ஏற்படலாம். 

மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு

மிதுனம்: இந்த வாரம் மனஅழுத்தம் அதிகரிக்கும். எனவே கவனமாக இருக்கவும், இல்லையென்றால் மருத்துவரை சந்திக்க நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். திருமண வாழ்வில் விரிசலை உண்டாக்கும் விஷயங்களை கேள்விப்படலாம் என்பதால் கவனமாக இருங்கள். எது நடந்தாலும் மன உறுதியே அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

கடகம்: அதிர்ஷ்ட சக்கரம் இந்த வாரம் உங்கள் பக்கம் இருக்கிறது. முதலீடு செய்ய திட்டமிடலாம். இந்த வாரம் பல மாற்றங்கள் திடீரென்று ஏற்படும். மூதாதையர் சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: இந்த வாரம் உங்களின் ஆலோசனைகள் அலுவலகத்தில் மதிப்பை உயர்த்தும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் அலட்சிய மனோபாவம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும், இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.

கன்னி: இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வீடு மற்றும் பணியிடத்தில் பொறுப்பு அதிகரிப்பதால் சோர்வாக உணர்வீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பண லாபம் மற்றும் சில நல்ல செய்திகள் கிடைப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் கொண்டாட்டமான சூழல் நிலவும்.

மேலும் படிக்க | புத்திசாலி ஆனால் பிடிவாதம்: இது மேஷ ராசி குழந்தைகளுக்கு ஜோதிடம் சொல்லும் ஆருடம்

துலாம்: இந்த வார தொடக்கத்தில் வாழ்க்கைத் துணையுடன் அல்லது தொழில் துணையுடன் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுவதால் கவனமாக இருக்கவும். வாழ்க்கையில் பிடிப்பு குறைந்தாலும், இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை ஏர்படும். வாரத்தின் மத்தியில் சில சுவாரசியமான செய்திகள் வந்து சேரும். பயணங்கள் நன்மை தரும்.

விருச்சிகம்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது.

தனுசு: இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் நடைபெறலாம். மனதோடு ஒத்துப்போகும் நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு தென்படுகிறது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயணங்கள் கூடும். உடல்நிலை சீராக இருக்கும். ஆனால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

மகரம்: இந்த வாரம் நீங்கள் பணியிடத்திலும் குடும்பத்திலும் கொண்டாட்டங்களை அனுபவிப்பீர்கள். கௌரவம் அதிகரிப்பதோடு, பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளினால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதன் காரணமாக உங்களுடையத் துறையில் சிறப்பாக செயல்படுவீர்கள். செலவு அதிகரிப்பால் சில வேலைகள் நின்று போகலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
 
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில பெரிய செய்திகள் நடக்கப் போகிறது, இது உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும். அரசியல்வாதிகள் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. பயணத்தின் போது காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, கவனமாக இருக்கவும். இந்த வாரம் மதத்தின் மீதான உங்கள் நாட்டம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News