Sun Transit Benefits For Five Zodiac Signs: சூரிய பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சூரிய பகவானின் பெயர்ச்சி (Sun Transit) 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைய இருப்பது இந்த ராசிகளுக்கு அதிக பலன்களை தரும் எனலாம்.
கோள்களின் அரசனாக கருதப்படுபவர் சூரிய பகவான். நவம்பர் 16ஆம் தேதி காலை 7.16 மணிக்கு விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
சூரிய பகவானின் பெயர்ச்சியால் (Sun Transit) இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக இங்கு காணலாம்.
ரிஷபம் (Taurus): இந்த ராசிக்காரர்களின் 7ஆம் வீட்டில் சூரியன் இருப்பார். இதனால் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட தூரம் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு நன்மை அளிக்கும் பணியிடத்தில் உங்களின் சிறப்பான வேலையால் சக பணியாளர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உண்டாகும். வருவாய் அதிகரிக்கும், இது அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.
மிதுனம் (Gemini): உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். தைரியமான முடிவுகளுக்கு பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வித்தியாசமாக யோசிப்பீர்கள், உங்களின் திறனில் நம்பிக்கை உண்டாகும். இதனால் பெரிய நன்மைகள் கிடைக்கும்.
சிம்மம் (Leo): இந்த காலகட்டத்தில் உங்களின் இணையர் மீது காதலை பொழிவீர்கள். இதனால் உறவு பலமாகும். உங்களின் குழந்தைகளும் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள், இது உங்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுச்செல்லும். புதிய வேலைகளுக்கு மாற நினைப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். நிதி நிலைமையும் சீராக இருக்கும்.
விருச்சிகம் (Scorpio): போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி வரும். பல தேர்வுகளில் வெற்றி உறுதியாக கிட்டும். புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். சமூகத்தில் உங்களின் பேச்சாற்றலால் நன்மதிப்பும் உயரும். பெரிய தொகையையும் நீங்கள் சேமிப்பீர்கள்.
மகரம் (Capricon): இந்த ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகள், பூர்வீக சொத்துக்கள் ஆகியவை மூலம் எதிர்பாராத வரவு வரும். இதனால் கடன் பிரச்னை தீரும், புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு பிரச்னையும் தீரும். திருமண உறவில் புதிய இணையருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.