Weekly Horoscope: வெற்றி மழையில் முழுகப்போகும் இந்த ராசிக்காரர்கள்

இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2022, 12:40 PM IST
  • ரிஷபம் ராசிக்காரர்கள் பணவரவு ஏற்படலாம்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும்.
  • மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Weekly Horoscope: வெற்றி மழையில் முழுகப்போகும் இந்த ராசிக்காரர்கள் title=

வார ராசிபலன்: இந்த வாரம் (ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 10 வரை) சில ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகிறது. இந்த நேரத்தில் சிலருக்கு வேலையில் பதவி உயர்வையும் பெறலாம். அதேபோல் ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் ஏற்பட உள்ளதால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதன்படி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பேச்சில் கவனம் தேவை. மனதில் விரக்தி உணர்வுகள் எழலாம். தாயாரின் ஆதரவு கிடைக்கும், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்களில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நண்பரை சந்திக்கலாம். சுவையான உணவில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

ரிஷபம் - இந்த வாரம் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். புதிதாக பிறந்த குழந்தையால் மகிழ்ச்சி அதிகரிக்கும், அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். வாழ்க்கைத்துணை ஆதரவைப் பெறுவீர்கள், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

மிதுனம் - தன்னம்பிக்கை குறையும், மகிழ்ச்சி பெருகும், தாய்-தந்தையின் ஆதரவு கிடைக்கும். ஆடை போன்றவற்றின் மீது நாட்டம் அதிகரிக்கும், குவிந்த செல்வம் குறையும். பிள்ளைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம் - உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள், சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். குழந்தைகளின் கடமைகள் நிறைவேறும். நீங்கள் ஒரு அரசியல்வாதியை சந்திக்கலாம், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம் - மன அமைதி இருக்கும், இருப்பினும் அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில புதிய பணிகளின் பொறுப்பைப் பெறலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

கன்னி - சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும், தாயிடமிருந்து பணம் கிடைக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிட மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் கடின உழைப்பு மிகுதியாக இருக்கும், வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம், மதப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிக்கலாம். சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

துலாம் - மனஅமைதி இருக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள், தாயிடமிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம் - மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும், ஆனால் உரையாடலில் நிதானமாக இருங்கள். கல்விப் பணிகளில் மகிழ்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும், இடமாற்றம் ஏற்படலாம்.

தனுசு - மன அமைதி கிடைக்கும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பப் பொறுப்புகள் கூடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும், ஆடை போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படும், பிள்ளைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், முன்னேற்றப் பாதை அமையும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இந்த வாரம் இனிமையாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடும். இந்த வாரம் சகோதர சகோதரிகளால் சில நல்ல பலன்களைப் பெறலாம். வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமான விஷயங்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் வசதிகள் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் கடினமாக இருக்கும். பயனற்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News