இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை! எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!

இலங்கை அரசு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசா நடைமுறையை தளர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா செல்ல முடியும்.   

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2024, 06:31 AM IST
  • இலங்கைக்கு சுற்றுலா செல்ல எவ்வ்ளவு செலவாகும்?
  • அக்டோபர் 1 முதல் விசா இல்லாத அணுகல்.
  • சுற்றுலாவை மேம்படுத்த அரசு முடிவு.
இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை! எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ! title=

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல முடியும். அடுத்த 6 மாதங்களுக்கு உங்களால் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், மற்ற நாடுகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ளவும் முடியும் என்று இலங்கை அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விசா இல்லாத நடைமுறை இலங்கைக்கு சுற்றுலா வரும் எண்ணத்தை மக்களிடையே அதிகப்படுத்தும். இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியாக இருக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை தவிர சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கனடா போன்ற பிற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விசா இல்லாத அணுகல் வழங்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா மற்றும் சீனா உட்பட அதிக மக்கள் தொகை கொண்ட 7 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசாக்களை வழங்கியது இலங்கை அரசு. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் வரவே மீண்டும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு விசா நடைமுறையை தளர்த்தியதன் மூலம் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | NSC: அசத்தல் சேமிப்புத் திட்டம்.... வட்டியில் மட்டும் 4 லட்சத்துக்கு மேல் கிடைக்கும், முழு கணக்கீடு இதோ

எவ்வளவு செலவாகும்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமானங்கள், டூர் பேக்கேஜ்கள் மற்றும் தனிநபர் கடன்களை பெற்று கூட உங்களால் சுற்றுலா செல்ல முடியும். உங்களின் பயண வகையை பொறுத்து இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதற்கான செலவுகள் மாறுபடும். இலங்கைக்கு விமானங்கள் மூலம் செல்ல ஒரு நபருக்கு ரூ. 12000 முதல் ரூ. 20000 வரை ஆகலாம். சில தனியார் நிறுவனங்கள் டூர் பேக்கேஜுகளை வழங்குகிறது. ரூ. 21000 முதல் ரூ. 100000 வரையில் இந்த பேக்கேஜுகள் உள்ளன. போக்குவரத்து முதல் தங்கும் இடம் வரை இவற்றில் அடங்கும். மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளின் விமானங்கள் செலவு, ஹோட்டல்கள், ஷாப்பிங் செலவு போன்றவற்றிற்கு தனிப்பட்ட கடன்களையும் வழங்குகிறது. இலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இடங்களை மிஸ் பண்ணாம சுற்றி பாருங்க. 

இலங்கையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

சிகிரியா இலங்கையில் உள்ள மிகவும் அழகான இடம் ஆகும். இங்கு பழைய கோட்டை, பெரிய பாறை, பழைய ஓவியங்களையும் காணலாம். இங்கு ஒரு அரண்மனையின் இடிபாடுகளும் உள்ளன. நீங்கள் விலங்குகளை நேசிப்பவராக இருந்தால், யாலா தேசிய பூங்காவை சுற்றி பார்க்கலாம். இந்த பெரிய பூங்காவில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் வண்ணமயமான பறவைகள் போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறப்பு நகரம் காலிக்கு செல்லலாம். அங்கு டச்சுக்காரர்கள் வாழ்ந்த காலத்திலிருந்த பழைய கட்டிடங்களைக் காணலாம். நீங்கள் வெப்பமான காலநிலையில் இருந்து விடுபட விரும்பினால், நுவரெலியா ஒரு சிறந்த இடமாகும்! அழகான, குளிர்ந்த காற்று மற்றும் சுற்றிலும் அழகான பச்சை தேயிலை வயல்களைக் கொண்ட மலைவாசஸ்தலம் இது. 

மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்! வெற்றி உங்கள் வாசல் கதவை தட்டும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News