Watch Video: 5 mins-ல் 1.6 km அசால்டாய் ஓடி அசத்திய அமெரிக்காவின் 9 மாத கர்ப்பிணிப் பெண்!!

பொதுவாக ஒரு நபர் சராசரியாக 9-10 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரம் ஓட முடியும். ஆனால் ஒரு கர்ப்பிணிப் பெண் இதில் பாதிக்கும் குறைவான தூரத்தைதான் ஓட முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 02:35 PM IST
  • மைலர் தனது வலிமை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் மிகவும் கவனமாக இருப்பதாகக் கூறினார்.
  • கர்ப்பத்தின் இந்த கட்டத்தில், என்னால் இப்படி ஓட முடியும் என நான் கண்டிப்பாக நினைக்கவில்லை-மைலர்.
  • மைலர் தனது மகனை அக்டோபர் 19, அன்று பிரசவிப்பார்.
Watch Video: 5 mins-ல் 1.6 km அசால்டாய் ஓடி அசத்திய அமெரிக்காவின் 9 மாத கர்ப்பிணிப் பெண்!!  title=

ஒன்பது மாத கர்ப்பிணியான ஒரு பெண்மணி, 5 நிமிடம் 25 வினாடிகளில் 1.6 கிலோமீட்டர் ஓடிய நிகழ்வு சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிவிட்டது! 28 வயதான தடகள வீரர் மெக்கென்னா மைலர் (McKenna Myler) தனது கணவர் தன்னிடம் செய்த சவாலை ஏற்றுக்கொண்டு இதை செய்து காட்டினார்.

பொதுவாக ஒரு நபர் சராசரியாக 9-10 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரம் ஓட முடியும். ஆனால் ஒரு கர்ப்பிணிப் பெண் இதில் பாதிக்கும் குறைவான தூரத்தைதான் ஓட முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. இருப்பினும், மைலர் இதை தவறு என நிரூபித்தார். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள உடற்பயிற்சி ஆர்வலர்களையும் குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களையும் அவர் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மைலர் தனது வலிமை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் மிகவும் கவனமாக இருப்பதாகக் கூறினார். இதனால் இடுப்பு முறிவோ அல்லது கர்ப்பத்தால் எற்பட்ட கூடுதல் எடையால் எந்த காயமோ ஏற்படாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கர்ப்பமாக இருக்கும்போது ஓடுவது பாதுகாப்பானதா என்று மக்கள் ஆச்சரியப்படுவதைப் பொறுத்தவரை, கர்ப்ப காலத்தில் தனது உடற்பயிற்சி நடைமுறைகளை மருத்துவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று மைலர் விளக்கினார்.

ALSO READ: இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!

“கர்ப்பத்தின் இந்த கட்டத்தில், என்னால் இப்படி ஓட முடியும் என நான் கண்டிப்பாக நினைக்கவில்லை. எனக்கு பொதுவாக புதிய விஷயங்களை செய்து பார்க்க பிடிக்கும். ஆகையால் இதையும் செய்து பார்க்கலாம் என நினைத்தேன். நான் இதற்காக பெரிதாக எதையும் செய்யவில்லை. என் வழக்கமான பயிற்சிகளே எனக்கு உதவின. பொதுவாக எல்லா விஷயங்களுமே நம் மனதில் தான் இருக்கின்றன” என்றார் மைலர்.

"என் பயிற்சி வகைகள் என் வயிற்றில் குழந்தை உருவானவுடன் அதிகமாக மாறின. நான் முன்னர் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஓடுவது மற்றும் மூன்று தீவிர பயிற்சி அமர்வுகளைக் கொண்டிருந்தேன். அது ஒரு நாள் ஓட்டம் ஒரு பயிற்சி அமர்வு என மாறியது” என்று மைலர் மேலும் கூறினார்.

மைலர் தனது மகனை அக்டோபர் 19, அதாவது இன்று பிரசவிப்பார்!

ALSO READ: கையில் குழந்தை, மனதில் உறுதி: புலம் பெயர்ந்த பெண் தொழிலாளிதான் Corona காலத்து துர்கை அம்மன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News