Oprah Winfrey நிகழ்ச்சியில் இந்திய கலாசாரம் பற்றி ஐஸ்வர்யா ராயின் சாதுரியமான பதில்கள்

இந்திய கலாச்சாரம் குறித்த ஓப்ரா வின்ஃப்ரேயின் கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் சாதுரியமாக பதிலளித்தார். இருந்தாலும் விடாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த ஓப்ரா வின்ஃப்ரே ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் 'திருமணத்திற்கு வெளியே செக்ஸ்' குறித்தும், அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ராய் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2021, 07:56 PM IST
  • இந்திய கலாச்சாரம் குறித்த ஓப்ரா வின்ஃப்ரேயின் கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனின் பதில்
  • திருமணத்திற்கு வெளியே செக்ஸ்' குறித்தும் கேள்வி
  • திருமணத்தை தாண்டிய உறவு இந்தியாவில் தடைசெய்யப்பட்டதா என்ற சங்கடமான கேள்விக்கு சாதுரியமான பதிலளித்தார் ஐஸ்
Oprah Winfrey நிகழ்ச்சியில் இந்திய கலாசாரம் பற்றி ஐஸ்வர்யா ராயின் சாதுரியமான பதில்கள் title=

இந்திய கலாச்சாரம் குறித்த ஓப்ரா வின்ஃப்ரேயின் கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் சாதுரியமாக பதிலளித்தார். இருந்தாலும் விடாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த ஓப்ரா வின்ஃப்ரே ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் 'திருமணத்திற்கு வெளியே செக்ஸ்' குறித்தும், அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ராய் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

திரைத்துறையில் வேறு எவருக்கும் முன்பாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் அலைகளை உருவாக்கி, இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் உலகளாவிய மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இப்போது ஓப்ரா வின்ஃப்ரேயுடன் ஒரு நேர்காணலுக்கு உட்காரத் தயாராகி வருவதால், 2000 களின் முற்பகுதியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் 'தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ'வில் தோன்றி அதை திறமையாகச் கையாண்டது நினைவு கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா 2005 ஆம் ஆண்டில் ஓப்ராவின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தாம்பத்தியம், உடலுரவு, பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள், ஆங்கில மொழி, இந்தியாவில் அமெரிக்கப் பெண்களின் உணர்வுகள் மற்றும் தோல் நிறம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் ஐஸ்வர்யா ராய் திறமையாக பதிலளித்தார்.

Also Read | பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

பொதுவெளியில் முத்தமிடுவது பற்றி பேசிய ஐஸ்வர்யா, "இது உண்மையில் வழக்கமாக பார்க்கும் இயல்பான விஷயம் அல்ல. முத்தமிடுவது இயல்பான விஷயம் தான். ஆனால் அது தெருமுனையில் நடப்பதில்லை. முத்தம் என்பது உணர்ச்சியின் தனிப்பட்ட வெளிப்பாடு. வாழ்க்கையை கலைபடைப்புகள் பிரதிபலிக்கின்றன. எங்கள் சினிமாவும் அதைத்தான் செய்கிறது."

'திருமணத்திற்கு வெளியே செக்ஸ்' குறித்தும், அது தடைசெய்யப்பட்டதா என்றும் ஓப்ரா கேள்வி கேட்டார். இந்த இக்கட்டான கேள்விக்கும் இயல்பாக பதிலளித்த உலக அழகி, "பொதுவாக பேசினால், அது அவ்வளவு நல்லதல்ல" என்று தெரிவித்தார்.  

Also Read | தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது? 

ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களைப் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராய், "நகர்ப்புற இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் என்பது குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பின்னணியைத் தெரிந்துக் கொள்ளும் உலகளாவிய டேட்டிங் சேவையைப் போல இருக்கும், மேலும் அவர்கள் (தம்பதியரை) ஒன்று சேர்க்கிறார்கள். பரஸ்பரம் ஒத்துப்போனால் அது நிலைக்கும். ஒத்துப் போகவில்லை என்றால், பிரிவு ஏற்படும்" என்று மிகவும் அழகாக பதிலளித்தார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் 2009 இல் மீண்டும் ஓப்ராவின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

ஓப்ராவின் நிகழ்ச்சியில் அண்மையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மேகன் மார்கல் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிரியங்கா சோப்ராவுடன் நேர்காணல் நடத்தப்போகிறார் ஓப்ரா.

Also Read | Taj Mahal பெயர் ராம் மஹால் என்று மாற்றப்படுமா? காரணம்! 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News