UPI Transactions Daily Limit: இன்றைய காலகட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. பள்ளி மாணவ, மாணவியரே தற்போது வீட்டில் மொபைல் போன்களை பயன்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது.
அத்தகைய சூழலில், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற UPI பண பரிவர்த்தனைகளும் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்டது. அதற்கு ஏற்றவாறு, சிறிய கடைகளிலும் கூட கியூஆர் கோட் ஸ்கேனர் வைத்து, UPI மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில், நீங்களும் UPI மூலமாக பண பரிவர்த்தனையை பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் இந்த தகவல்களை தெரிந்துவைத்துக்கொள்வது உபயோகமாக இருக்கலாம். UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. 10 ரூபாயை கூட யாருக்காவது டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு UPI தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் UPI மூலமான பண பரிவர்த்தனையில் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் பரிமாற்றம் செய்யலாம்
மேலும் படிக்க | ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புதிய விதிகள் - இந்திய ரயில்வே!
அனைத்து வங்கிகளின் வரம்பும் வேறுபட்டது
அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பண பரிவர்த்தனை வரம்பு வேறுபட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் வெவ்வேறு வரம்புகளைப் பெறுகிறார்கள்.
எந்த வங்கியின் எவ்வளவு வரம்பு?
- நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால், ஒரு நாளில் UPI மூலம் ரூ.1 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம்.
- ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களும் ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம், ஆனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே.
- ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரம் வரை UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம், ஆனால் கூகுள் பே பயனர்களுக்கு இந்த வரம்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.
- பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
- ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
ரிசர்வ் வங்கியின் திட்டம்
இப்போது இந்திய ரிசர்வ வங்கி, UPI பண பரிவர்த்தனை தொடர்பாக ஒரு புதிய திட்டத்தை உருவாக்க உள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payment Corporation of India) நாட்டின் மூன்றாம் தரப்பு ஆப் வழங்குநர்களின் (TPAP) வரம்பை 30 சதவீதமாக குறைக்க தயாராகி வருகிறது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகுதான், போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற நிறுவனங்கள் அதன் வரம்பை சரிசெய்ய முடியும், இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனினும், இதற்கு எவ்வளவு வரம்பு விதிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ