மத்திய ஊழியர் சம்பள உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அகவிலைப்படி அதிகரிப்புக்கு பிறகு, இப்போது 2023 ஆண்டிலேயே ஊழியர்களுக்கு மீண்டும் 2 பரிசுகள் கிடைக்கவுள்ளன. ஒருபுறம், ஜூலை மாதத்தில் மீண்டும் ஊழியர்களின் அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் அதிகரிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிப்ரவரி மாதத்திற்கான AICPI தரவுகளிலிருந்து இது மதிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறம், 8வது ஊதியக் குழு தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், வரவிருக்கும் தேர்தலுக்கு முன், ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம். இது நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில், தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட பிப்ரவரி புள்ளிவிவரங்கள், 0.1 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 132.7 ஐ எட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டிஏ மீண்டும் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிகுறிகள் உள்ளன. ஜூலை மாதம் இந்த ஆண்டின் இரண்டாவது உயர்வு ஆகும். மார்ச் முதல் ஜூன் வரையிலான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இவை வந்த பிறகு, ஜூலை 2023 இல் ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுபவர்களின் டிஏ எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும்.
அகவிலைப்படி 45 அல்லது 46 சதவீதமாக உயரலாம்
ஜனவரி முதல் ஜூலை வரை AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களில் பெரிய அதிகரிப்பு இருந்தால், அது மொத்த அகவிலைப்படியை 45 சதவிகிதமாக அதிகரிக்கும். புதிய விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். ரக்ஷாபந்தனை ஒட்டி இது அறிவிக்கப்படலாம். இருப்பினும் டிஏ எவ்வளவு அதிகரிக்கும், எப்போது அறிவிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி 2023 ஜனவரி 1 முதல் ஜூன் 1 வரை பொருந்தும். இதன் பலன்கள் 48 லட்சம் ஊழியர்களுக்கும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கலாம்
அகவிலைப்படியைத் தவிர, மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிக்கக்கூடும். தற்போது இது 2.57 சதவீதமாக உள்ளதால், 7வது ஊதியக்குழுவின் கீழ் இந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இதை அதிகரிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, ஃபிட்மென்ட் ஃபாக்டர் திருத்தத்தை மோடி அரசு பரிசீலிக்கும் வாய்ப்பு உள்ளது. இது 3.00 சதவீதம் அல்லது 3.68 சதவீதம் வரை உயர்த்தப்படக்கூடும். இந்த ஃபிட்மென்ட் பேக்டர் உயர்வு 2026ல் இருந்து அமல்படுத்தப்படலாம். 2024ல் தேர்தல் வரவிருப்பதால், 2023 இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் 52 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
ரூ. 96,000 வரை சம்பளம் உயரும்
இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஃபிட்மென்ட் பாக்டர் அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டும் முதல் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6000லிருந்து ரூ.18,000 ஆக நேரடியாக உயர்த்தப்பட்டது. இப்போது இது உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18,000 லிருந்து 21,000 அல்லது 26,000 ஆக உயரும்.
உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து, அவருடைய சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ 95,680 (26000 X 3.68 = 95,680) ஆக இருக்கும், அதாவது ரூ 49,420 ஏற்றம் இருக்கும். ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் 3 மடங்கு ஆனால், சம்பளம் ரூ 21000 X 3 = ரூ 63,000 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | DA Hike: அடுத்தடுத்து வரும் அகவிலைப்படி உயர்வு... இன்று வெளியாகும் அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ